உலகம்

கவர்ச்சியாக லோ கட் பிளேஸர் அணிந்த பின்லாந்து பிரதமர்- ஆதரவும் எதிர்ப்பும்

34 வயதான பின்லாந்தின் பிரதமர் சன்னா மரின், "கவர்ச்சியாக லோ கட்" ஜாக்கெட் அணிந்த புகைப்படத்தை வெளியிட்டார். இதனால் நெட்டிசன்களின் கிண்டலுக்கு உள்ளனார். இந்நிலையில் அவருக்கு பெண்ணியவாதிகள் மத்தியில் ஆதரவு எழுந்துள்ளது.

ஹெல்சிங்கி :-

பின்லாந்தின் பிரதமராக, சன்னா மரீன்(34) பதவி வகித்து வருகிறார். உலகின் மிக இளவயது பிரதமர் என்ற பெருமை இவருக்கு உண்டு. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர், பேஷன் இதழ் ஒன்றுக்கு லோ கட் ஜாக்கெட் அணிந்தபடி போஸ் கொடுத்தார். இதனை கண்டதும், சமூக வலைதளங்களில் அவருக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. 

फिनलैंड: पीएम सना मारिन ड्रेस को लेकर हुईं ट्रोल, समर्थकों ने ट्रोलर्स को  इस अंदाज में दिया जवाब , Finland: PM Sanna Marin Trolled For Wearing Low  Cut Blazer
உயரிய பதவியில் இருந்து கொண்டு இப்படி செய்வது சரியல்ல என தெரிவித்தனர். அதில் ஒரு சிலர், பதவிக்கான பெருமையை கெடுத்து விட்டதாகவும், அவர் பிரதமரா அல்லது மாடலா எனவும் கேள்வி எழுப்ப துவங்கினர். சர்வதேச அரசியலிலும், பொதுமக்களிலும் மரீன் நம்பிக்கையையும், செல்வாக்கையும் இழப்பதாக விமர்சனம் எழுந்தது.

இந்நிலையில் லோ கட் பிளேஸர் அணிந்த பின்லாந்து பிரதமர் சன்னா மரீனுக்கு, அங்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், ஏராளமான பெண்கள் அவருக்கு ஆதரவாக லோகட் ஜாக்கெட்அணிந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகின்றனர்.

Finland PM Trolled for 'Modelling' in Low-cut Jacket, Netizens Call Out  Sexism by Posting Similar Pics

இது பின்லாந்தில் ஏராளமான பெண்கள் மற்றும் பெண்ணியவாதிகள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. அவர்கள் சன்னா மரீனுக்கு தங்களது ஆதரவை காட்டும் வகையில், லோ கட் ஜாக்கெட் உடையணிந்த படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதற்காக சமூக வலைதளங்களில் உருவாக்கப்பட்ட #ISupportSannaMarin #ImWithSanna ஹேஷ்டேக்குகள் அங்கு டிரெண்டிங்கில் இருந்தன

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
26-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate