Just In

ஒரே சமயத்தில் 50 பிரபலங்கள் வெளியிட்ட 'கண்ணாமூச்சி' படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர், இயக்குநராகிறார் வரலக்ஷ்மி சரத்குமார்!

இதுவரை நடிகையாக இருந்த பிரபல நடிகரின் மகள் இயக்குநராக அவதாரம் எடுக்கவிருக்கிறாராம். 'போடா போடி' படத்தின் மூலம் அறிமுகமாகிய நடிகை வரலக்ஷ்மி சரத்குமார் இயக்கியிருக்கும் 'கண்ணாமூச்சி' திரைப்படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டரை 50 பிரபலங்கள் ஒரே சமயத்தில் வெளியிட்டிருக்கிறார்கள். விஜய்யின் மனைவி சங்கீதா முதல் ஜோதிகா வரை பகிர்ந்திருக்கும் இந்த படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களால் பகிரப்பட்டு வைரலாகிவருகிறது.

'போடா போடி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைத்தவர் பிரபல நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி. சிம்புவுடன் இணைசேர்ந்து நடித்து 2012 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி இருந்தார். இயக்குநர் பாலாவின் 'தாரை தப்பட்டை' படத்தை தொடர்ந்து விக்ரம் வேதா, சண்டக்கோழி 2 போன்ற படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வரும் இவர் இயக்குநர் ஆகவிருக்கிறாராம். 

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் தான் இயக்கி நடிக்கும் படத்திற்கு கண்ணாமூச்சி என பெயர் சூட்டியிருக்கிறார் வரலக்ஷ்மி. 

கிருஷ்ண சாமி ஒளிப்பதிவு செய்து சாம் சி.எஸ். இசை அமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகை வரலக்ஷ்மி ட்விட்டரில் வெளியிட்டார். 'கண்ணாமூச்சி' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை 50 பிரபலங்கள் ஒரே சமயத்தில் வெளியிட்டிருக்கின்றனர். 
விஜய்யின் மனைவி சங்கீதா ஜோதிகா போன்ற பல பெண் பிரபலங்கள் ஒரே நேரத்தில் வெளியிட்டிருப்பது பெண்களுக்கும் படங்களை இயக்குவதில் அலாதி பிரியம் இருப்பதை மறைமுகமாக காட்டுகிறது. நடிப்பை தாண்டி படத்தை இயக்கும்  பெண்கள் அவற்றிலும் தங்கள் இடத்தை தக்கவைக்க முயல்வது இந்த காலகட்டத்தில் அவசியமாகியிருக்கிறது.  
 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee