Just In

நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு எதிர்பாக்கல, முகக்கவசமின்றி பயணித்த 'அருவி' பட நடிகைக்கு அபராதம்!

கொரோனா ஊரடங்கால் கடைப்பிடிக்கபட்டு வந்த கட்டுப்பாடுகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட சுற்றுத்தளங்களுக்கு பயணிகளின் வருகை அதிகரித்துவருகிறது. என்னதான் தளர்வுகள் இருந்தாலும் கூட விதிமுறைகளை மீறுபவர்களிடம் சுகாதாரத்துறை கண்டிப்பாக அபராதம் விதித்துதான் வருகிறது. இந்நிலையில், முகக்கவசம் இன்றி விதிமுறைகளை மதிக்காமல் வந்த அருவி திரைப்பட நடிகை அதிதி பாலனுக்கு சுகாதார துறை அதிகாரிகள் அபராதம் விதித்திருக்கின்றனர்.

கொரோனா தொற்று பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை  அடுத்து, சுற்றுலா தலங்கள் மூடப்பட்டு கிடக்கின்றன. தற்போது தளர்வுகளும் அமல்படுத்தப்பட சுற்றுலா தலங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. 


வார விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. முகக்கவசம் இல்லாமல் வருபவர்களிடம் சுகாதாரத்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அப்போது அங்கு முகக்கவசம் இன்றி வந்த அருவி திரைப்பட நடிகை அதிதி பாலனிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் ரூ.200 அபராதம் விதித்தனர். 

தான் ஒரு வழக்கறிஞர் எனக்கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மறுப்பு தெரிவித்திருக்கிறார். அதிகாரிகள் கண்டிப்பாக நடந்துக்கொண்டதால் வேறு வழியின்றி அபராத பணத்தை கட்டியிருக்கிறார் அருவி பட நாயகி. அதிகாரிகளிடம் நடிகை அதிதி வாக்குவாதத்தில் ஈடுபட்டது சில மணி நேரங்கள் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee