Just In

'மணிரத்தினம்-கெளதம் மேனன் காம்போவில் உருவாகும் முதல் வெப் சீரீஸ்'

மணிரத்னம் தயாரிப்பில் 9 இயக்குநர்களால் உருவாகி வரும் வெப் தொடருக்கு ‘நவரசா’ என பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இந்த வெப் தொடரில் இயக்குநர் கவுதம் மேனன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். சித்தார்த், அரவிந்த்சாமி இயக்குநர்களாக அறிமுகமாகும் இந்த வெப் தொடரில் சூர்யா, விஜய் சேதுபது, பார்வதி, சினேகா, ஜெய் நடிக்கவிருக்கிறார்களாம்.

முன்னணி இயக்குநரான மணிரத்னம், அடுத்ததாக ‘நவரசா’ என்ற வெப் தொடரை தயாரித்து வருகிறாராம். 9 தொடர்கள் கொண்ட இந்த வெப் தொடரை கார்த்திக் நரேன், கார்த்திக் சுப்புராஜ், கே.வி. ஆனந்த், பிஜாய் நம்பியார், பொன்ராம், சித்தார்த், அரவிந்த்சாமி உள்பட 9 இயக்குனர்கள் இயக்குகின்றனர். இந்த வெப் தொடரின் மூலம் நடிகர்கள் சித்தார்த், அரவிந்த்சாமி ஆகியோர் இயக்குனர்களாக அறிமுகமாகிறார்கள்.

சூர்யா, விஜய் சேதுபது, பார்வதி, சினேகா, ஜெய் ஆகியோர் இந்த வெப் தொடரில் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ரவி வர்மன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்நிலையில், இந்த வெப் தொடரில் இயக்குனர் கவுதம் மேனனும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

அதன்படி கார்த்திக்  சுப்புராஜ் இயக்கத்தில் கவுதம் மேனன் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இத்தனை கலவைகள் கொடுக்கப்பட்டிருக்கும் இந்த வெப் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee