Just In

"பல அவமானங்களை சந்தித்துவிட்டேன், இனி அந்த மொழி படங்களில் பாடமாட்டேன்" பாடகர் விஜய் யேசுதாஸ் முடிவு!

பிரபல பின்னணி பாடகரும் நடிகருமான விஜய் யேசுதாஸ், இனி மலையாள மொழி படங்களில் பாட மாட்டேன் என தெரிவித்துள்ளார். மூன்று முறை கேரள அரசின் விருதையும், ஐந்து முறை பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ள இவர் மலையாள திரையுலகில் தமக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்பதால் இந்த அதிர்ச்சி முடிவை எடுத்திருக்கிறாராம். இது ரசிகர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.

மலையாள படங்களில் பாடி தமது திரைப்பயணத்தை தொடங்கிய கே.ஜே.யேசுதாசின் மகன் இனிமேல் அந்த மொழி படங்களில் பாட மாட்டேன் என்று கூறியுள்ளார். தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள விஜய் யேசுதாஸ் இந்த முடிவை எடுத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மூன்று முறை கேரள அரசின் விருதையும், ஐந்து முறை பிலிம்பேர் விருதையும் பெற்றுள்ள இவர் படைவீரன், மாரி போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார். மலையாள திரையுலகில் தமக்கு உரிய மரியாதை கிடைக்கவில்லை என்றும், அங்கு பலமுறை அவமானங்களை சந்தித்ததாகவும் விஜய் யேசுதாஸ் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. இவரது இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Oct-2020
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee