லைப் ஸ்டைல்

நவராத்திரி பலகாரம் செய்வது எப்படி?

நவராத்திரி சமயங்களில் எவ்வளவு வேலைகள் இருந்தாலும், வீட்டிலேயே எளிதில் பலகாரங்களைச் செய்தோமானால் நமக்கு ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. எளிதில் செய்யக்கூடிய பலகாரமான எள் பர்ஃபியை எப்படி செய்வது என பார்க்கலாம்..

தேவையான பொருட்கள்:

வெள்ளை எள் - 1 கப்
நெய் - 3 ஸ்பூன்
வெல்லம் - ½ கப்
தண்ணீர் - சிறிதளவு
பிஸ்தா, பாதாம் - சிறிதளவு (நறுக்கியது)

செய்முறை:

வாணலியில் ஒரு கப் வெள்ளை எள்ளை போட்டு அடுப்பை சிறு தீயில் வைத்து மூன்று நிமிடங்கள் வறுக்கவும். வறுத்த எள் ஆறியவுடன் அதை மிக்சியில் கொர கொரப்பாக அரைத்து கொள்ளவும்.

மற்றொரு தவாவில் இரண்டு ஸ்பூன் நெய்யை ஊற்றி அதில் பொடி செய்து வைத்துள்ள அரை கப் வெல்லத்தை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அடுப்பை மெல்லிய தீயில் வைத்து கொதிக்க விடவும். பாகு வந்தவுடன் அதில் அரைத்து வைத்துள்ள எள்ளை சேர்த்து ஒரளவு திரண்டு வரும் வரை கை விடாமல் கிளறவும்.

பின்பு, நெய் தடவிய தட்டில் திரண்ட எள்ளை கொட்டி சமன் செய்து அதன் மேல் நறுக்கி வைத்துள்ள பாதாம், பிஸ்தாக்களால் அலங்காரம் செய்யவும்.

வெது வெதுப்பாக சூடு இருக்கும் பொழுதே கத்தியில் நெய் தடவிக் கொண்டு வேண்டிய அளவில் பர்பியாக அறுக்கவும். ஆறிய பிறகு பர்பியாக துண்டுகள் போடுவது மிகவும் கடினமாகி விடும். இப்பொழுது, சுவையான சத்துகள் நிறைந்த எள் பர்ஃபி தயார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Nov-2020
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee