லைப் ஸ்டைல்

திருமணமாகாத ஆண்கள் தான் கொரோனா பாதிப்பால் அதிகம் உயிரிழக்கிறார்களாம், 90'ஸ் கிட்டுகளே உஷார்!

கொரோனா பாதிப்பால் பெரியவர்களும் குழந்தைகளும் தான் அதிக பாதிப்புக்குள்ளாக்கப்படுவார்கள் என்பதை தாண்டி இளைஞர்களே அதிக பாதிப்புக்குள்ளாக்கப்படுவார்கள் என எச்சரிக்கை விடுகின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதன் காரணிகளை இங்கு காண்போம்..

திருமணமானவர்களை விட, திருமணமாகாத ஆண்களும் மற்றும் பெண்களும் தான் கொரோனா நோய்த்தொற்றால் இறப்பதற்கு 1.5 முதல் 2 மடங்கு அதிக ஆபத்து இருப்பதாக கூறுகிறது சமீபத்தில் வெளிவந்த ஆய்வின் முடிவு. ஸ்வீடனில், கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 20 வயதுடைய மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய நபர்கள் குறித்த ஸ்வீடிஷ் தேசிய சுகாதார மற்றும் நலவாரியத்தின் தரவுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் முடிவில் பல அதிர்ச்சிகரமான முடிவுகள் வெளிவந்திருக்கின்றன. 


கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் குறைந்த வருமானம் மற்றும் குறைந்த கல்வியறிவுடன் திருமணமாகாத ஒரு நடுத்தர வருமானம் கொண்ட இளைஞர்களுக்கு உயிரிழப்பு அபாயம் இருப்பதாக எச்சரிக்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.

ஒரு மனிதன், குறைந்த வருமானம் மற்றும் குறைந்த கல்வி ஆகியவற்றைக் கொண்டிருப்பது கோவிட் -19 ஆல் இறக்கும் அபாயத்தை அதிகரிக்கும் என்று ஆய்வு காட்டுகிறது. இதை பொறுத்தவரை, இது மற்ற நோய்களிலிருந்து இறப்புக்கான வடிவங்களுடனும் உடன்படுகிறது. மேலும், இந்த ஆய்வில் கொரோனா நோய்த்தொற்றால் பெண்களை விட ஆண்களே இரண்டு மடங்கு அதிகமாக உயிரிழக்கும் அபாயம் இருப்பதைக் காட்டியுள்ளது.

மேலும், ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஒப்பிடக்கூடிய வயதில் ஆண்கள் பொதுவாக அதிக இறப்பைக் கொண்டுள்ளது உயிரியல் மற்றும் வாழ்க்கை முறையின் கலவையாக கருதப்படுகிறது. "குறைந்த கல்வி அல்லது குறைந்த வருமானம் உள்ளவர்கள் அதிக இறப்பு விகிதத்தில் உள்ளனர் என்பது பெரும்பாலும் பணப் பிரச்சினை உள்ளிட்ட வாழ்க்கை முறை காரணிகளால் இருக்கலாம் என மறைமுகமாக தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள். 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Nov-2020
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee