ஆன்மிகம்

கொலுப்படிகளில் நிச்சயம் இடம்பெற வேண்டிய பொம்மைகள் எவையெவை?

நவராத்திரி கொலுவில் சில பொம்மைகள் கண்டிப்பாக இடம் பெற வேண்டும். அந்த வகையில் இடம் பெற வேண்டிய பொம்மைகள் என்னவென்று பார்க்கலாம்.

கொலு வைக்கும் பொழுது முதல் படியில் ஓரறிவு கொண்ட உயிரினங்களான புல், பூண்டு, செடி, கொடி, தாவர வகைகளை வைக்க வேண்டுமாம். இரண்டாவது படியில் இரண்டு அறிவு கொண்ட பிராணிகள், நத்தை, சிப்பி, சங்கு போன்றவற்றை இடம்பெறச் செய்ய வேண்டும். மூன்றாவது படியில் மூன்றறிவு கொண்ட எறும்பு, கரையான் பொம்மைகளை வைக்க வேண்டும். நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிரினங்களான நண்டு, வண்டு போன்ற ஜீவ ராசிகளின் பொம்மைகள், ஐந்தாவது படியில் ஐந்தறிவு கொண்ட விலங்குகள் மற்றும் பறவைகள் போன்றவற்றின் பொம்மைகள், ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட மனித பொம்மைகள் மற்றும் நாட்டிற்காக உழைத்த தலைவர்களின் பொம்மைகள், ஏழாவது படியில் மனித சக்திக்கு அப்பாற்பட்ட மகான்களின் பொம்மைகள் இடம்பெறச் செய்ய வேண்டும். எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள், தெய்வங்கள், நவக்கிரகங்களின் பொம்மைகளை வைக்க வேண்டும்.

ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளையும், அவர்களின் துணைவியர்களான சரஸ்வதி, லட்சுமி, துர்க்கை ஆகிய மூவரையும் வைக்க வேண்டும். இதற்கெல்லாம் நடுநாயகமாக கொலு பீடத்தில் விநாயகப் பெருமானையும், ஆதிபராசக்தியையும் வைத்து வழிபட வேண்டும். படிப்படியாக முன்னேறப் படிகளிலே கொலு வைத்து நாம் வழிபட வேண்டும்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee