உலகம்

நிலவில் 4ஜி நெட்வொர்க்கை அமைக்க நோக்கியா நிறுவனத்துடன் நாசா ஒப்பந்தம் !!!

நிலவில் 4ஜி/எல்டிஇ நெட்வொர்க்கை அமைக்க அமெரிக்கா விண்வெளி நிறுவனமான நாசா பிரபல செல்போன் நிறுவனமான நோக்கியாவுடன் கூட்டனி அமைத்துள்ளது.

கலிஃபோர்னியா:- 

சந்திரனை சொந்தம் கொண்டாடும் முயற்சியில் அமெரிக்காவின் நாசா ஈடுபடதொடங்கி உள்ளது. சந்திரனில உள்ள வளங்களுக்கான புதிய சந்தையை உருவாக்கும் செயல்முறையை அமைத்து வருகிறது. இதற்காக அங்குள்ள உள்ள பாறைகளையும், பாறை படிவங்களையும் எடுக்கக்கூடிய உலகெங்கிலும் உள்ள தனியார் நிறுவனங்களைத் நாசா தேடுகிறது.

அது போல்  நிலவில் 4ஜி நெட்வொர்க்கை அமைக்க பிரபல செல்போன் நிறுவனமான நோக்கியாவுடன் நாசா ஒப்பந்தம் போட்டு உள்ளது.

2028க்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வு செய்வதற்கான பணிகளை தீவிரப்படுத்தி உள்ள நாசா, அதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்க, பல நிறுவனங்களுடன் இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 714 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

Nasa Supports Nokia For Placing 4g Network On Moon -

அந்த வகையில், நிலவில் ஆய்வு செய்யும்போது விண்வெளி வீரர்கள் விண்கலத்துடன் தொடர்புகொள்வதற்கும், எச்டி தரத்திலான படங்களை அனுப்பவும், நிலவின் மேற்பரப்பில் 4ஜி நெட்வொர்க்கை அமைக்க நோக்கியாவுக்கு இந்திய மதிப்பில் 102 கோடி ரூபாயை நாசா வழங்கியுள்ளது. 

நோக்கியா முதலில் நிலவில் 4 ஜி / எல்டிஇ நெட்வொர்க்கை நிறுவிய பின்னர் அதனை 5 ஜி ஆக நெட்வொர்க்காக மாற்ற திட்டமிட்டுள்ளது.

நோக்கியா இதுபோன்று நிலவில் நெட்வொர்க்கை நிறுவிய திட்டமிடுவது இது முதல் முறை அல்ல. முன்னதாக 2018 ஆம் ஆண்டில், நோக்கியா எல்.டி.இ நெட்வொர்க்கை நிலவில் நிறுவ முதல் முயற்சியை மேற்கொண்டது. அப்போலோ 17 திட்டத்தின் பொது எல்.டி.இ நெட்வொர்க்கை நிறுவும் திட்டத்துடன் ஜெர்மன் விண்வெளி நிறுவனமான பி.டி.எஸ் மற்றும் வோடபோன் நிறுவனத்துடன் கூட்டணி அமைத்தது நோக்கியா. ஆனால், இந்த திட்டத்தை இதுவரை நோக்கியாவால் செயல்படுத்த முடியவில்லை.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
44470.26 44118.10
என்.எஸ்.இ
12962.80 13064.20
1 கிராம்
Rupee 4520 Gold Rate
8 கிராம்
Rupee 36160 Gold Rate
1 கிராம்
Rupee 63.30 Gold Rate
1 கிலோ
Rupee 63300 Gold Rate