உலகம்

உலக பூர்வகுடியினர் பட்டியலில் நீலகிரியின் படுகர்கள் சேர்ப்பு!!!

நீலகிரியின் படுகர் இன மக்களை உலக பூர்வகுடியினருக்கான பட்டியலில் சேர்த்தது ஐக்கிய நாடுகளின் மலைகளுக்கான கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

ஊட்டி:-

தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் படுகர், தாேடர், காேத்தர், காட்டுநாயக்கர், இருளர், குரும்பர், பனியர் என 6 வகையான பழங்குடியினர் வசித்து வருகின்றனர். இதில் இருளர், குரும்பர், காட்டு நாயக்கர் ஆகிய 3 வகை பழங்குடியின மக்கள் கர்நாடகா, கேரளா மாநிலங்களிலும், தமிழகத்தின் வேறு சில மாவட்டங்களிலும் வசிக்கின்றனர். 

இதைப்பாேல இந்தியாவில் பல்வேறு பழங்குடியின மக்கள் வசித்து வந்தாலும், படுகர்களின் பூர்வீகம் நீலகிரி தான் என்று சொல்லப்படுகிறது.  படுகர்களின் கல்வெட்டு படி, பாரம்பரியமாக இவர்கள் எருமை வளர்ப்பவர்கள், சமீப காலத்தில் இவர்கள் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டுவருகிறார்கள்.

இந்நிலையில்,நீலகிரியின் படுகர் இன மக்களை பூர்வகுடியினருக்கான பட்டியலில் சேர்த்து, ஐ.நா., மலைகளுக்கான கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

Tribes in the Nilgiris: The Badaga Culture

ஐக்கிய நாடுகளின், மலைகளுக்கான கூட்டமைப்பு, உலக பூர்வகுடியினருக்கான பட்டியல் தயாரிப்பு பணியை மேற்கொண்டு வருகிறது. 'நீலகிரி ஆவண மைய காப்பகம்' சார்பில், நீலகிரி படுக சமுதாயம், உலக பூர்வகுடியினருக்கான பட்டியலில் இடம்பெற வேண்டி, அனைத்து ஆவணங்களுடன், விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

ஐக்கிய நாடுகளின் மலைகளுக்கான கூட்டமைப்பு, அளித்த விண்ணப்பத்தை ஏற்று, கடந்த அக்டோபர் 12ம் தேதி படுகர் சமுதாயத்தை உலக பூர்வ குடியினர் பட்டியலில் சேர்த்துள்ளது. அதற்கான அறிவிப்பு சான்றிதழை, படுகர் இன தலைவர் அய்யாரு, நீலகிரி ஆவண காப்பக இயக்குனர் வேணுகோபால் மற்றும் நிர்வாகிகள், கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவை சந்தித்து வழங்கினர்.

படுகர் இன தலைவர் அய்யாரு கூறுகையில்:-

''படுகர் மக்கள் நீலகிரியின் மண்ணின் மைந்தர்கள் என்று, ஐக்கிய நாடுகளின் மலைகளுக்கான கூட்டமைப்பு அறிவித்து, பூர்வகுடியினருக்கான பட்டியலில் சேர்த்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாரம்பரிய கலாசாரத்தை, மலை மாவட்ட மக்கள் காக்க வேண்டும்,'' என்றார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
44470.26 44118.10
என்.எஸ்.இ
12962.80 13064.20
1 கிராம்
Rupee 4520 Gold Rate
8 கிராம்
Rupee 36160 Gold Rate
1 கிராம்
Rupee 63.30 Gold Rate
1 கிலோ
Rupee 63300 Gold Rate