ஆன்மிகம்

நவராத்திரி ஸ்பெஷல் கறுப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல்!

நவராத்திரி ஸ்பெஷல் இடங்களுள் ஒன்றான கறுப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டல் எப்படி செய்வது என்பதை இதில் காண்போம்..

வீட்டு கொலு வைபவத்தைக் காண அம்பாளே நேரில் வருவாள் என்கின்றன ஞான நூல்கள். இதையொட்டியே கொலு வைபவம் காண வரும் பெண்களுக்கு மஞ்சள், குங்குமம், ரவிக்கை முதலான மங்கலப் பொருட்களையும் நைவேத்திய பிரசாதங்களும் வழங்குகிறோம். அந்த வகையில் உங்கள் வீட்டு கொலு வைபவத்தில் இந்த கறுப்பு கொண்டைக்கடலை மசாலா சுண்டலைப் படைத்து வருபவர்களுக்கு அளித்து மகிழலாம். அம்பாள் அருளைப் பெறலாம்.

தேவையான பொருட்கள்:
கறுப்பு கொண்டைக்கடலை - ஒரு கப்
சோம்பு - கால் டீஸ்பூன்
பட்டை - சிறிய துண்டு
கிராம்பு, ஏலக்காய் - தலா ஒன்று
புதினா - சிறிதளவு
காய்ந்த மிளகாய் - 3
தேங்காய்த்துருவல் - 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

செய்முறை:
கடலையை ஆறு முதல் எட்டு மணி நேரம் ஊறவிட்டு, குக்கரில் வேகவைக்கவும். வெந்த கடலையைத் தண்ணீரை வடியவிட்டு எடுத்து வைக்கவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி, காய்ந்த மிளகாய், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய் தாளித்து, புதினா சேர்த்து வதக்கவும். இதனுடன் வெந்த கடலை, தேவையான உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய் துருவலை தூவி இறக்கினால் கொண்டைக்கடலை மசாலா சுண்டல் தயார். விருப்பப்பட்டால் கரம் மசாலாத்தூளும் சேர்க்கலாம்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee