உலகம்

பாகிஸ்தானில் ஹோட்டல் அறைக்கதவை உடைத்து நவாஸ் ஷெரீப்பின் மருமகன் திடீர் கைது

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முஸ்லீம் லீக் (நவாஸ்) தலைவருமான நவாஸ் ஷெரீப்பின் மருமகனை அவர் தங்கியிருந்த ஹோட்டல் அறைக்கதவை உடைத்து போலீசார் கைது செய்த சம்பவம் பாகிஸ்தான் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கராச்சி:-

பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும் முஸ்லீம் லீக் (நவாஸ்) தலைவருமான நவாஸ் ஷெரீப்பின் மரியம் நவாசின் கணவர் சப்தார் அவானை போலீசார் கைது செய்துள்ளனர். 

பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சி, ஜாமியத் உலமா இ இஸ்லாம் மற்றும் பாகிஸ்தான் மக்கள் கட்சி உள்ளிட்ட 11 எதிர்க்கட்சிகள் சேர்ந்து பாகிஸ்தான் ஜனநாயக இயக்கம் (பிடிஎம்) என்கிற கூட்டணியை கடந்த மாதம் அமைத்தன. 

Maryam Nawaz's husband Safdar Awan 'arrested' in Karachi after rally  against Imran Khan government - world news - Hindustan Times


இந்த இயக்கத்தின் மூலம் இம்ரான்கான் ஆட்சிக்கு எதிராக கராச்சி நகரில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்காண ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், கராச்சி நகரில் பேரணி முடிந்ததும் மரியம் அவரது கணவருடன் தங்கியிருந்த ஹோட்டலுக்கு திரும்பினார். அவர்கள் இருவரும் ஹோட்டல் அறையில் இருக்கும் பொழுது போலீசார் அவர்களை கைது செய்தனர் என்று மரியம் பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

மரியத்தின் கணவர் கைது செய்யப்பட்ட விவரம் குறித்து அரசுத் தரப்பு செய்தி எதுவும் வெளியிடப்படவில்லை.
கராச்சி மாநாடு:-
 
கராச்சி நகரில் பாகிஸ்தான் ஜனநாயக இயக்கத்தின் சார்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பேரணி நடைபெற்றது. இந்தப் பேரணியில் கலந்துகொள்ள வந்த மரியமும் அவரது கணவரும் வழியிலுள்ள வழிபாட்டுத்தலத்தில் இறங்கி வழிபாடு செய்தனர்.

அந்த வழிபாட்டுத் தலத்தில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக கோஷமிட்டதாக பிரிகேட் காவல்நிலையத்தில் பாக்கிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (பி.டி.ஐ) கட்சி சார்பில் காயிட்-இ-அசாமின் மசார் பாதுகாப்பு சட்டம் 1971ன் கீழ் புகார் அளிக்கப்பட்டது.

The abettors: Maryam and Capt Safdar | The Express Tribune

மரியம் அவரது கணவர் அவான் மற்றும் 200க்கும் மேற்பட்ட குண்டர்கள் வழிபாட்டு தலத்தில் கோஷமிட்டு ரகளை செய்ததாக அந்த புகாரில் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் அவான் கைது செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த பேரணியில் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் பேசிய மரியம் அரசுக்கு எதிராக தீப்பொறி பறக்க பேசியதாக கூறப்படுகிறது. பேரணியின் இறுதியில் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் பூட்டோ சர்தாரி கலந்து கொண்டு உரையாற்றினார். இம்ரான் கானுக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை பிலாவல் பூட்டோ சர்தாரி முன்வைத்தார். 

மேலும், நவாஸ் ஷெரீப்பின் மகள் மரியம் நவாஸ் ஷெரீப் பேசும்போது, பாகிஸ்தானில் மீண்டும் நவாஸ் ஷெரீபை பிரதமர் ஆக்குவதாகவும், இம்ரான் கானை ஜெயிலுக்கு அனுப்புவதாகவும் பேசினார். இந்த நிலையில், மரியம் நவாசின் கணவர் சப்தார் அவானை போலீசார் கைது செய்துள்ளனர்.

அதன் காரணமாகவும் மரியத்தின் கணவர் கைது செய்யப்பட்டு இருக்கலாம் என்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆர்வலர் அம்ஜத் அயூப் மிர்சா கூறினார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4576 Gold Rate
8 கிராம்
Rupee 36608 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700