உலகம்

இந்தோ-பசிபிக்: ஜப்பான் வியட்நாம் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் வெளிப்படையான மற்றும் சுலபமான வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில் ஜப்பான் மற்றும் வியட்னாம் நாடுகளிடையே ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது. மேலும் இந்த ஒப்பந்தம் பாதுகாப்பு தளவாடங்களை ஜப்பானிலிருந்து வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் வழிவகுத்துள்ளது.

டோக்கியோ:-

சமீபத்தில் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் இந்தியா ஜப்பான் ஆஸ்திரேலியா அமெரிக்கா உள்ளிட்ட இந்தோ-பசிபிக் பிராந்திய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் மட்டத்திலான சந்திப்பு நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற இந்தியா, ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் சமீபகாலமாக சீனா தொடர்ந்து மோதல் போக்கை கடைப்பிடித்து வருகிறது.  இந்நிலையில் ஜப்பான் மற்றும் வியட்னாம் நாடுகளிடையே புதிதாக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மூலமாக இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் இருநாடுகளிடையே வெளிப்படையான சுலபமான வர்த்தகத்தை ஊக்குவிக்கவும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த ராணுவ தளவாடங்களை ஏற்றுமதி செய்யவும் இருநாடுகளிடையே இந்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Asia Whole and Free? Assessing the Viability and Practicality of a Pacific  NATO | Belfer Center for Science and International Affairs

தென்சீனக்கடல் விவகாரத்தில் சீனா வியட்னாமும் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. இருநாடுகளிடையே சமீபகாலமாக உரசல்கள் அதிகரித்துள்ள நிலையில் ஜப்பான் வியட்நாம் மேற்கொண்டுள்ள இந்த ஒப்பந்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

மேலும் ஜப்பான் சீனா இடையேயும் பல காலமாக தகராறுகள் நீடித்து வருகின்றனர்.

இதனிடையே வியட்நாம் மற்றும் இந்தியா இடையே தீவிரவாதத்திற்கு எதிரான ஒத்துழைப்பு, போதைப்பொருள் கடத்தல் மற்றும் அணுசக்தி உள்ளிட்டவை தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா நிரந்தர உறுப்பினராவதற்கு வியட்நாம் தனது ஆதரவு தெரிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
44470.26 44118.10
என்.எஸ்.இ
12962.80 13064.20
1 கிராம்
Rupee 4520 Gold Rate
8 கிராம்
Rupee 36160 Gold Rate
1 கிராம்
Rupee 63.30 Gold Rate
1 கிலோ
Rupee 63300 Gold Rate