உலகம்

பதப்படுத்தப்பட்ட உணவில் வாழும் கொரோனா வைரஸ்- பகீர் கிளப்பும் சீனா

சீனாவில் பதப்படுத்தப்பட்ட உணவில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பீஜிங்:-

அண்மையில், சீன சுகாதார அதிகாரிகள், பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளில் வாழும் கொரோனா வைரஸைக் கண்டுபிடித்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும், குளிர் விநியோகச் சங்கிலிகளில் இந்த வைரஸ் உயிர்வாழ முடியும் என்றும் கூறியுள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஊஹான் நகரத்தில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலகமெங்கும் பரவிவிட்டது. உலகத்துக்கு கொரோனா வைரசை முதன்முதலில் அறிமுகம் செய்து வெளிப்படுத்தியது ஊஹான் நகர கடல்வாழ் உணவு சந்தை. அதன்பின்னர் அங்கு கொரோனா கட்டுப்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், தலைநகர் பீஜிங்கில் உள்ள ஜின்பாடி மொத்த விற்பனை சந்தை மூலம் மீண்டும் பெருமளவில் பரவியது.

இந்த நிலையில், அங்குள்ள கிங்டாவோ என்ற துறைமுக நகரத்தில் கொரோனா வைரஸ் தொற்று, கொத்து கொத்தாக பரவத் தொடங்கியது. இதனால் கவலை அடைந்த அந்த நகர நிர்வாகம், அங்கு வாழும் 1 கோடியே 10 லட்சம் மக்களுக்கும் வைரஸ் தொற்று பரிசோதனை நடத்தியது.

தற்போது அங்கு பதப்படுத்தி, உறைய வைக்கப்பட்ட உணவு பொட்டலத்தின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் வாழும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உறைந்த உணவின் மாதிரிகளில் வைரஸின் மரபணு தடயங்கள் முன்னர் கண்டுபிடிக்கபட்டுள்ளன.

ஆனால் இதற்கு முன்னர் எந்த உயிருள்ள வைரஸும் இப்படி உணவுப்பொருள் ‘பேக்கேஜிங்’கின் மேற்பரப்பில் வாழும் நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது உலகிலேயே இது முதல் முறை என்று கூறப்படுகிறது. இதை சி.டி.சி. என்று சொல்லப்படுகிற சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உறுதி செய்துள்ளது.

Live coronavirus found on frozen food packaging in China | China | The  Guardian

சீனாவில் கடந்த ஜூலை மாதம், ஒரு கண்டெய்னரின் உள்சுவரிலும், ‘பேக்கேஜிங்’கிலும் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, உறைந்த இறால் மற்றும் பிற உறைந்த கடல் உணவுகள் இறக்குமதி நிறுத்தப்பட்டது. அதேபோல, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், பிரேசிலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட உறைந்த கோழிகளின் சிறகுகளில் வைரஸின் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட பின்னர் உறைந்த பொருட்களில் ஆய்வு செய்வதற்கான  தேவைகளை சீனா அதிகரித்தது. 

இந்த நிலையில் தற்போது கிங்டாவோ நகரில் பதப்படுத்தி உறைய வைக்கப்பட்டிருந்த உணவு பொட்டலத்தின் மேற்பரப்பில் கொரோனா வைரஸ் வாழும் நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டு இருப்பது முக்கியத்துவம் பெறுகிறது. இந்த உணவுப்பொருள் எந்த நாட்டில் இருந்து அங்கு இறக்குமதி செய்யப்பட்டது என்ற தகவல் வெளியிடப்படவில்லை.

China Coronavirus: Living Coronavirus Found On Frozen Food Packaging In  China

இந்த ‘பேக்கேஜிங்’கை தொடுகிறவர்களை கொரோனா வைரஸ் தொற்றிக் கொள்ளும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையும் சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உறுதிப்படுத்தி உள்ளது.

இதற்கிடையே சீனாவின் பிரதான பகுதிக்கு வெளியே 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தேசிய சுகாதார கமிஷன் நேற்று தெரிவித்தது. சி.டி.சி மொத்தம் 2.98 மில்லியன்  உறைய வைக்கப்பட்ட உணவு பொட்டல மாதிரிகளில் இருந்து, 22 மாதிரிகளில் வாழும் நிலையில் வைரஸை ஆராய்ச்சியாளர்கள்  கண்டறிந்தனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4576 Gold Rate
8 கிராம்
Rupee 36608 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700