உலகம்

வியட்நாமில் இராணுவ முகாமில் நிலச்சரிவு ஏற்பட்டதில் பலர் உயிரிழப்பு

வியட்னாம் நாட்டில் வெள்ளம் மற்றும் மழையால் பெரிய நிலச்சரிவு ஏற்பட்டதில் இராணுவ முகாமில் இருந்த பல ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.

ஹனோய்:-

வியட்நாம் நாட்டில்கடந்த சில நாட்களாக பெய்து வரும்  கனமழை காரணமாக ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. குவாங் டிரை மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ராணுவ முகாம் ஒன்று மண்ணுக்குள் புதைந்ததில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வாரம் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 13 பேர் உயிரிழந்த நிலையில் ஒரே வாரத்தில் இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 64 என அதிகரித்துள்ளது. அக்டோபர் மாத ஆரம்ப நாட்களில் கனமழை காரணமாக வெள்ளமும் நிலச்சரிவும் ஏற்பட்டது. மேலும் சில நாட்களுக்கு கனமழை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நிலச்சரிவு தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய வியட்நாம் பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பாண் வான் ஜியாங்க், நாங்கள் இன்னுமொரு உறக்கமற்ற இரவை எதிர்கொண்டோம் என்றார். சம்பவத்தை நேரில் பார்த்த சிலர், குண்டு வீச்சு போல மழை எங்கள் மீது விழுந்தது என தெரிவித்துள்ளனர். நள்ளிரவு 2 மணியில் இருந்தே அப்பகுதியில் 5 முறை நிலச்சரிவு ஏற்பட்டதாகவும், பலத்த சத்தத்துடன் வெடித்ததாகவும், அங்கிருந்த மலையே வெடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

துவா தியென் ஹ்யூ மாகாணத்தில், மீட்புப் படையினர் குறைந்தது 15 கட்டுமானத் தொழிலாளர்களைக் காணவில்லை . வார தொடக்கத்தில் ஒரு மலைப்பாங்கான பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுக்குப் பின்னர் இறந்துவிட்டதாக அஞ்சுகின்றனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
44470.26 44118.10
என்.எஸ்.இ
12962.80 13064.20
1 கிராம்
Rupee 4520 Gold Rate
8 கிராம்
Rupee 36160 Gold Rate
1 கிராம்
Rupee 63.30 Gold Rate
1 கிலோ
Rupee 63300 Gold Rate