இந்தியா

காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் - முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை விசாரணை

காஷ்மீர் கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக ஜம்மு-காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

ஸ்ரீநகர்:-

2005 முதல் 2012ம் ஆண்டு வரை ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தை  கடன் வழங்கும் நிறுவனம் போல மாற்றி  பல போலி கணக்குகள்  மூலம் நிதி முறைகேடு செய்ததாக அப்துல்லா உட்பட, பத்து அதிகாரிகள் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

இந்த வழக்கில் விசாரணை நடத்திய சிபிஐ அமைப்பு, முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் பொதுச்செயலாளர் முகமது சலீம் கான், பொருளாளர் அஸன் அகமது மிர்ஸா, மிர் மன்சூர் காசன்பர் அலி, பசிர் அகமது மிஸ்கர், குல்சர் அகமது பெய்க் ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்நிலையில், இந்த ஊழல் பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

காஷ்மீரில் கிரிக்கெட் விளையாட்டை ஊக்குவிப்பதற்காக கடந்த 2002 முதல் 2011 ஆம் ஆண்டுவரை காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்திற்கு இந்திய கிரிக்கெட் சங்கம் 112 கோடி ரூபாய் நிதியாக வழங்கியது. 

இந்த நிதியில் 43.69 கோடி ரூபாயை கிரிக்கெட் நடவடிக்கைகளுக்கு செலவிடாமல் பணமோசடியில் ஈடுபட்டதாக அப்போது காஷ்மீர் கிரிக்கெட் சங்க தலைவராக இருந்த அப்போதைய காஷ்மீர் முதல்மந்திரி பரூக் அப்துல்லா உள்ளிட்ட பலர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறது.  

இந்நிலையில், கிரிக்கெட் சங்க ஊழல் தொடர்பாக முன்னாள் முதல்மந்திரி பரூக் அப்துல்லாவிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று விசாரணை நடத்தினர். 

ஸ்ரீநகரில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இந்த விசாரணை நடைபெற்றது. இந்த விசாரணைக்கு பின் அமலாக்கத்துறை அலுவலகத்தை விட்டு வெளியே வந்த பரூக் அப்துல்லா செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியதாவது:- 

இந்த விசாரணை பல ஆண்டுகளாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. புதிதாக ஒன்றும் இல்லை. இதற்கு மேல் நான் எதையும் கூற விரும்பவில்லை. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றம் முடிவெடுக்கும். எனக்கு எந்த ஒரு கவலையும் இல்லை. நாம் மிக நீண்ட தூரம் செல்லவேண்டியுள்ளது, பரூக் அப்துல்லா அரசியலில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் உயிருடோடு இருந்தாலும், இல்லாவிட்டாலும் மிக நீளமான அரசியல் போராட்டம் தொடர்ந்து நடைபெற வேண்டும்.  

நான் தூக்கிலிடப்பட்டாலும் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் பெறும் வரை நமது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றார். 

மேலும்,அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் சம்மனுக்கு விளக்கம் அளித்துள்ளோம். குப்கார் தீர்மானத்தையொட்டி காஷ்மீர் தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். அதனால் ஏற்பட்ட அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை இது. விசாரணை மட்டுமே நடத்தப்பட்டது. எந்தவிதமான ஆய்வுகளும் நடத்தப்படவில்லை எனத் தெரிவித்தார்


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4576 Gold Rate
8 கிராம்
Rupee 36608 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700