உலகம்

சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் எகிப்திற்கு அமெரிக்கா வலியுறுத்தல்

சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள சமூக ஆர்வலர்களை உடனடியாக எகிப்து அரசு விடுவிக்க வேண்டும் என்று அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் எகிப்து அதிபரை வலியுறுத்தியுள்ளனர்.

கெய்ரோ:-

எகிப்து நாட்டில் பத்திரிக்கையாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள்உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டவர்கள் சிறைகளில் சட்டவிரோதமாக அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று எகிப்து அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசி அமெரிக்காவைச் காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

US legislators call on Egypt's el-Sisi to release prisoners | Middle East |  Al Jazeera

இதுதொடர்பாக, 55 காங்கிரஸ் உறுப்பினர்கள் எகிப்து அதிபர் அல் சிசிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்த கடிதத்தில் இவ்வாறு அவர்கள் சிறைகளில் வைக்கப்பட்டுள்ளது மனித உரிமை மீறல் என்றும் அவர்கள் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

அல்-சிசி எகிப்தில் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து, நாடு முழுவதும் உள்ள நீதிமன்றங்கள் அவரது எதிர்ப்பாளர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெரும்பாலான தீர்ப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அதேவேளையில் பெரும் எதிர்ப்புக்கு மத்தியில் இந்த மாத தொடக்கத்தில் 15 பேருக்கு  மரணதண்டனைகளை நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், வெவ்வேறு வழக்குகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 35 அரசியல் கைதிகள் மரணதண்டனைக்காக காத்திருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
44470.26 44118.10
என்.எஸ்.இ
12962.80 13064.20
1 கிராம்
Rupee 4520 Gold Rate
8 கிராம்
Rupee 36160 Gold Rate
1 கிராம்
Rupee 63.30 Gold Rate
1 கிலோ
Rupee 63300 Gold Rate