உலகம்

தேர்தல் பிரச்சாரம்: செய்தியாளரை குற்றவாளி என சாடிய அதிபர் டிரம்ப்

அமெரிக்காவில் வரும் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிபர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் வரும் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிபர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அமெரிக்காவில் கொரோனாவை அதிபர் டொனால்ட் டிரம்ப் சரியாக கையாளவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை முன்னிறுத்தியே ஜோ பிடன் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார்.

இந்நிலையில் லாஸ்வேகாஸில் டொனால்ட் டிரம்ப் தேர்தல் பிரசாரம் நடத்தினார். அப்போது டிரம்பிடம்  அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் அவர் குடும்பத்தினருக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து கேள்விகள் கேட்கப்பட்டன.

அப்போது தன்னிடம் கேள்வி கேட்ட செய்தியாளரை ஒரு கிரிமினல் என்று திட்டிய டிரம்ப், எதிர்கட்சி வேட்பாளரான ஜோ பிடனும் ஒரு கிரிமினல் என்றும் தெரிவித்தார்.

'நீங்கள் ஒரு குற்றவாளி.  ஜோ பிடனும் ஒரு குற்றவாளி, அவர் நீண்ட காலமாக ஒரு குற்றவாளியாக இருக்கிறார், அதைப் புகாரளிக்காததற்காக உங்கள் ஊடகமும் நீங்களும் ஒரு குற்றவாளி. அனைவருக்கும் நல்ல அதிர்ஷ்டம். ஒரு நல்ல நேரம் கிடைக்கும் என அவர் கூறினார்.

மேலும் நோய் எதிர்ப்பு சக்தி நிபுணரும், வெள்ளை மாளிகையின் கொரோனா வைரஸ் அதிரடி படையின் உறுப்பினரும் டாக்டருமான ஆன்டனி பவுசியும், சுகாதாரத் துறை அதிகாரிகளும் முட்டாள்கள் என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் நிறுத்தினார் 



Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
44470.26 44118.10
என்.எஸ்.இ
12962.80 13064.20
1 கிராம்
Rupee 4520 Gold Rate
8 கிராம்
Rupee 36160 Gold Rate
1 கிராம்
Rupee 63.30 Gold Rate
1 கிலோ
Rupee 63300 Gold Rate