விளையாட்டு

தொடர் தோல்வியில் சென்னை; புள்ளி பட்டியலில் கடைசி இடம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. ஆட்டநேர முடிவில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. 17.3-வது ஓவரில் 126 ரன்கள் எடுத்து ராஜஸ்தன் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற சென்னை சூப்பர்கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.சென்னை அணியின் சார்பில் சாம் கர்ரன் மற்றும் டூ பிளஸ்சிஸ் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். 

ஆட்டநேர முடிவில் சென்னை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் அணியின் சார்பில் அதிகபட்சமாக ராகுல் தேவாட்டியா, ஜோப்ரா ஆர்ச்சர், கார்த்திக் தியாகி மற்றும் கோபால் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சொற்பமான இலக்குடன் களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி துவக்கத்தில் சற்று தடுமாறியது.  இருப்பினும் 17.3-வது ஓவரில் 126 ரன்கள் எடுத்து ராஜஸ்தன் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. 

ஜோஸ் பட்லர் 48 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் உள்பட 70 ரன்களும், ஸ்மித் 34 பந்துகளில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.  இந்த தோல்வியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10 ஆட்டங்களில் ஆடி 7 தோல்விகளுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee