தொழில்நுட்பம்

களைகட்டிய ப்ளிப்கார்ட் சிறப்பு விற்பனை.. 12 மணி நேரத்தில் 1.75 லட்சம் எல்ஜி ஸ்மார்ட்போன்கள் விற்பனை..!!

எல்ஜி நிறுவனம் தனது பிளாக்ஷிப் ஜி8எக்ஸ் தின்க் ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சிறப்பு விற்பனையில் சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வரும் என ஏற்கனவே அறிவித்து இருந்தது. ஆனால், இந்த சிறப்பு விற்பனையில் இதன் விலை ரூபாய் 21,990 என்று நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. ப்ளிப்கார்ட் விற்பனையின் போது 12 மணி நேரத்தில் எல்ஜி ஜி8எக்ஸ் தின்க் மட்டும் ரூ. 350 கோடி வருவாய் ஈட்டிக் கொடுத்ததாக எல்ஜி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ரூ. 70 ஆயிரம் எனும் பிரீமியம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டது. எனினும், இதன் விலை குறைக்கப்பட்டு, சிறப்பு சலுகைகள் அவ்வப்போது அறிவிக்கப்பட்டு வந்தன.

தற்சமயம் ப்ளிப்கார்ட் தளத்தில் எல்ஜி ஜி8எக்ஸ் தின்க் ஸ்மார்ட்போன் ரூ. 21,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எனினும், விற்பனை துவக்கத்தின் போது இந்த ஸ்மார்ட்போன் ரூ. 19,990 துவக்க விலையில் விற்னை செய்யப்பப்பட்டது. 

ப்ளிப்கார்ட் விற்பனையின் போது 12 மணி நேரத்தில் எல்ஜி ஜி8எக்ஸ் தின்க் மட்டும் ரூ. 350 கோடி வருவாய் ஈட்டிக் கொடுத்ததாக எல்ஜி நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. 

மொத்தம் 12 மணி நேரம் விற்பனை நடைபெற்றதால், குறைந்த விலையை கணக்கில் எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் எல்ஜி சுமார் 1.75 லட்சம் யூனிட்களை விற்பனை செய்திருக்கலாம் என்றே தெரிகிறது.

டூயல் ஸ்கிரீன் கொண்ட எல்ஜி ஸ்மார்ட்போன் தள்ளுபடி மட்டுமின்றி வங்கி சலுகைகள், கேஷ்பேக் மற்றும் வட்டியில்லா மாத தவணை போன்ற வசதிகள் வழங்கப்படுகின்றன.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
09-May-2021
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate