Just In

டிஆர்பி முறைகேடு வழக்கு: 200 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர முடிவு

பார்வையாளர்களுக்கு பணம் கொடுத்து தங்களது டிஆர்பியை அதிகரிக்க முயன்றதாக குற்றம்சாட்டிய நிலையில் மும்பை போலீஸ் கமிஷனர் மீது ரூ 200 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுக்க ரிபப்ளிக் டிவி முடிவு செய்துள்ளது.

டிஆர்பி ரேட்டிங்கை போலியாக காட்டி விளம்பர வருவாயை அதிகரித்தாக ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட 3 தொலைக்காட்சிகள் மீது மும்பை போலீஸ் வழக்கு தொடர்ந்து உள்ளது. இதுதொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் வீடுகளுக்கு செட் டாப் பாக்ஸ் நிறுவும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்.  வீடுகளுக்கு வழங்கும் செட் டாப் பாக்ஸ் மூலம் தங்கள் சேனலை மட்டுமே மக்கள் அதிகம் பார்ப்பது போல் காட்டி டிஆர்பி ரேட்டிங்கில் மோசடி நடத்தியதாக அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி உள்பட மேலும் இரு மராத்தி சேனல்கள் மீது மும்பை போலீஸ் வழக்கு பதிவு செய்தது.  இதனைதொடர்ந்து மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போதுமுதல் தகவல் அறிக்கையில்  ரிபப்ளிக் நிறுவனத்தின் பெயர் சேர்க்கப்படவில்லை என்பதை மும்பை போலீஸாரும், மகாராஷ்டிரா அரசு தரப்பு வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்

இதையடுத்து மும்பை கமிஷனர் பரம்பீர் சிங் மீது ரூ 200 கோடி நஷ்ட ஈடு கேட்டு மான நஷ்ட வழக்கு தொடரவுள்ளதாக அர்னாப் கோஸ்வாமி முடிவு செய்துள்ளார். அதில் ரூ 100 கோடி அர்னாப் பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காகவும், ரூ 100 கோடி ரிபப்ளிக் நிறுவனத்தின் பெயரை டேமேஜ் செய்த காரணத்திற்காகவும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கையில் ரிபப்ளிக் நிறுவனத்தின் பெயர் சேர்க்கப்படாததால் இந்தியாவின் நம்பர் 1 நிறுவனமான ரிபப்ளிக் டிவி எந்த தவறையும் செய்யவில்லை என தெரியவந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

<blockquote class="twitter-tweet"><p lang="en" dir="ltr">News Release: Arnab &amp; Republic to sue Param Bir Singh for Rs. 200 cr, as Maharashtra Govt and Mumbai Police admit in court that Network is not named in the TRP case FIR. <a href="https://t.co/iNSoasmyaa">pic.twitter.com/iNSoasmyaa</a></p>&mdash; Republic (@republic) <a href="https://twitter.com/republic/status/1318162401577951235?ref_src=twsrc%5Etfw">October 19, 2020</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4576 Gold Rate
8 கிராம்
Rupee 36608 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700