சினிமா

25 வருடத்தை நிறைவு செய்த ஷாருக்கானின் டிடிஎல்ஜே; கொண்டாடும் ரசிகர்கள்

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா தயாரிக்க தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே (Dilwale Dulhania Le Jayenge) இந்தி திரைப்படம் உருவானது. இப்படத்தை இயக்கியவர் ஆதித்யா சோப்ரா. ஆதித்யா சோப்ராவுக்கு இதுவே முதல் திரைப்படம். நடிகர் ஷாரூக்கான் கதாநாயகனாக நடித்திருக்க, நடிகை கஜோல் ககதாநாயகியாக நடித்திருந்தார். இதன் பாடல்கள் இந்தி தெரியாதவர்களையும் தாளம் போட வைத்து ரசிக்க வைத்தது.இது குடும்பப் பாங்கான காதல் திரைப்படம் என்பதால் படத்திற்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்தது. வெறும் 4 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் அன்றைய காலகட்டத்திலேயே 102.50 கோடி ரூபாயை வசூலித்தது.

பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா தயாரிக்க தில்வாலே துல்ஹானியா லே ஜாயங்கே (Dilwale Dulhania Le Jayenge) இந்தி திரைப்படம் உருவானது. இப்படத்தை இயக்கியவர் ஆதித்யா சோப்ரா. ஆதித்யா சோப்ராவுக்கு இதுவே முதல் திரைப்படம். நடிகர் ஷாரூக்கான் கதாநாயகனாக நடித்திருக்க, நடிகை கஜோல் ககதாநாயகியாக நடித்திருந்தார். 

இதன் பாடல்கள் இந்தி தெரியாதவர்களையும் தாளம் போட வைத்து ரசிக்க வைத்தது.இது குடும்பப் பாங்கான காதல் திரைப்படம் என்பதால் படத்திற்கு மிக பெரிய வரவேற்பு கிடைத்தது. வெறும் 4 கோடி ரூபாயில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் அன்றைய காலகட்டத்திலேயே 102.50 கோடி ரூபாயை வசூலித்தது.

இந்த திரைப்படம் 1995ம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது. இப்படம் வெளியான அன்றிலிருந்து மும்பையின் மராத்தா மந்திர் திரையரங்கில் ஆயிரம் வாரங்கள் தாண்டி ஓடி சாதனை படைத்தது. 

இத்திரைப்படம் வெளியாகி இன்றோடு 25-வது வருடம் நிறைவடைகிறது. 25 வருட நிறைவையொட்டி சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் இப்படத்தை குறித்த நினைவுகளை பகிர்ந்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate