இந்தியா

திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்க கோரி முற்றுகை போராட்டம்

கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பக்தர்கள் சாமி வழிபாடு நடத்த அனுமதிக்கப்பட்டது முதல் இலவச தரிசனம், 300 ரூபாய் கட்டண தரிசனம், 500 ரூபாய் பிரேக் தரிசனம் ஆகியவற்றை அனுமதித்து வந்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் தற்போது இலவச தரிசனத்தை தவிர்த்து மற்ற தரிசன நடைமுறைகளை அமலில் வைத்துள்ளது.

300 ரூபாய் தரிசன டிக்கெட்டுகள், 500 ரூபாய் விஐபி தரிசன டிக்கெட்டுகள், தலா பத்தாயிரம் ரூபாய் தேவஸ்தானத்தின் ஆலய நிர்மாண அறக்கட்டளைக்கு நன்கொடையாக கொடுத்த பக்தர்கள் தற்போது ஆகியோர் மட்டுமே ஏழுமலையானை வழிபடுகின்றனர். ஆனால் இலவச தரிசன அனுமதியை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கைகள் பல்வேறு தரப்பிலிருந்தும் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திருமலா திருப்பதி சம்ரக்ஷன சமிதி என்ற பெயரிலான இந்து அமைப்பினர், பக்தர்கள் இலவசமாக ஏழுமலையானை தரிசிக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இன்று திருப்பதியில் உள்ள தேவஸ்தான நிர்வாக அலுவலக கட்டிடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

நாளை முதல் ஏழுமலையானை தரிசிக்கும் பக்தர்களில் 50 சதவிகிதத்தினர் இலவச தரிசன பக்தர்கள் ஆக இருக்க வேண்டும். நாளை முதல் இலவச தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதிக்க தேவையான நடவடிக்கைகளில் தேவஸ்தானம் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் அனைத்து இந்து அமைப்புகளையும்  ஒன்றுபடுத்தி போராட்டத்தை தீவிரப்படுத்துவோம் என்று வலியுறுத்தினர் 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4576 Gold Rate
8 கிராம்
Rupee 36608 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700