இந்தியா

தேர்தல்களில் வேட்பாளர்களின் தேர்தல் செலவு வரம்பை உயர்த்தியது தேர்தல் ஆணையம்!!

பிஹார் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது மக்களவைத் தேர்தலில் வேட்பாளர் ரூ.77 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று ரூ.70 லட்சத்திலிருந்து உயர்த்தப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணைய பரிந்துரைகளின்படி மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்தலுக்காக செலவிடும் தொகையின் வரம்பை தேர்தல் ஆணையம் 10% அதிகரித்துள்ளது.

கொரோனா வைரஸ் முடக்கத்தினால் வேட்பாளர்கள் எதிர்கொள்ளும் கடினப்பாடுகளைக் கருத்தில் கொண்டு வேட்பாளர்கள் 10 சதவீதம் கூடுதலாக தேர்தல் செலவுகளை செய்துக்  கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

பிஹார் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போது மக்களவைத் தேர்தலில் வேட்பாளர் ரூ.77 லட்சம் வரை செலவு செய்யலாம் என்று ரூ.70 லட்சத்திலிருந்து உயர்த்தப்பட்டுள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தல்களில் களம் காணும்  வேட்பாளர்கள் செலவு செய்யும் செலவு வரம்பு ரூ.28 லட்சத்திலிருந்து ரூ.30.8 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இது மாநிலங்களுக்கு மாநிலம் வேறுபடும். கடந்த முறை வேட்பாளர் தேர்தல்செலவு வரம்பு உயர்த்தப்பட்டது 2014 மக்களவைத் தேர்தலின் போது என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4576 Gold Rate
8 கிராம்
Rupee 36608 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700