Just In

நடிகர் பிரித்விராஜ்-க்கு கொரோனா

பிரபல நடிகரும், இயக்குநருமான ப்ரித்விராஜ், டிஜோ ஜோஸின் ஜன கன மன படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

 கொச்சி:-

கொரோனா ஊரடங்கு தொடங்கிய போது, 'ஆடுஜீவிதம்' படத்தின் படப்பிடிப்பிற்காக ஜோர்டான் சென்ற படக்குழுவினர் அங்கே சிக்கிக் கொண்டனந். பல நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு மே மாதம் பிரித்விராஜ் உட்பட ஒட்டுமொத்தப் படக்குழுவினருடன் இந்தியா திரும்பினார்.

பின்னர், கேரளாவில் கொரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு படத்தின் படப்பிடிப்பிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். சில தினங்களுக்கு முன்புதான் டிஜோ ஜோஸின் 'ஜன கண மன' படப்பிடிப்பில் கலந்து கொண்டார். 


இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கும்போது அனைத்துப் படக்குழுவினருக்கும் கொரோனா பரிசோதனை செய்தார்கள்.


தற்போது படப்பிடிப்பு முடிவடையும்போது கொரோனா பரிசோதனை செய்த போது பிரித்விராஜுக்குக் தொற்று இருப்பது உறுதியானது.


இது தொடர்பாக பிரித்விராஜ் தனது வெளியிட்டுள்ள பதிவில்:-


"திஜோ ஜோஸ் ஆண்டனியின் 'ஜன கண மன' படப்பிடிப்பில் அக்டோபர் 7-ம் தேதியிலிருந்து பணியாற்றி வருகிறேன். கோவிட் தொற்றைத் தடுக்க அதற்கான விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்றினோம். பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்தோம்.


விதிமுறைகளுக்கு ஏற்ப படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்னாலும், கடைசி நாள் படப்பிடிப்புக்குப் பிறகும் அனைவருக்கும் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டது. துரதிர்ஷ்டவசமாகக் கடைசியாக எடுக்கப்பட்ட பரிசோதனையில் எனக்குத் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. நான் தனிமையில் இருக்கிறேன். எனக்குக் கொரோனா அறிகுறிகள் இல்லை. நலமாக இருக்கிறேன்.


என்னுடன் தொடர்பிலிருப்பவர்கள் அனைவரும் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறேன்.


விரைவில் குணமாகி வேலைக்குத் திரும்புவேன் என நம்புகிறேன். அனைவரின் அன்புக்கும், அக்கறைக்கும் நன்றி".


இவ்வாறு பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
29-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.84(லி) Diesel Rate
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4575 Gold Rate
8 கிராம்
Rupee 36600 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700