விளையாட்டு

படுதோல்வி அடைந்த சென்னை: இப்போது புள்ளி பட்டியலில் எங்கு உள்ளது தெரியுமா?

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கெதிராக 125 ரன்களை தாண்ட முடியாமல் தோல்வியடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் புள்ளிகள் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டது.

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் அபு தாபியில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
டாஸ் சாதகமாக அமைந்தாலும் சென்னை அணியால் 125 ரன்களே அடிக்க முடிந்தது. ராஜஸ்தான் பந்து வீச்சாளர்கள் யாரும் மொத்தமாக விக்கெட் வீழ்த்தவில்லை என்றாலும் சென்னை அணி பேட்டிங்கில் சறுக்கியது.

பின்னர் ராஜஸ்தான் ராயல்ஸ் ஜோஸ் பட்லரின் (70) சிறப்பான ஆட்டத்தால் 17.3 ஓவரில் 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தத் தோல்வியின் மூலம் சென்னை சூப்பர் கிங்ஸ் 10 போட்டிகளில் விளையாடி 3-ல் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. 7-ல் தோல்வியடைந்துள்ளது. இன்னும் மீதமுள்ள நான்கு போட்களிலும் வெற்றி பெற்றாலும் 14 புள்ளிகள் மட்டுமே பெற முடியும். இதனால் பிளே ஆஃப்ஸ் சுற்று மங்கிப்போனது. ஒருவேளை நான்கிலும் வெற்றி பெற்று அந்த அணி இந்த அணியை வெற்றி பெற்றால் என்ற கணக்கீடு வந்தால் ஒருவேளை பிளேஆஃப்ஸ் சுற்றுக்கு வாய்ப்புள்ளது. ஆனால் நேற்றை போட்டியில் சென்னை கிங்ஸ் அணியினர் விளையாடிய விதம் சென்னை கிங்ஸ் ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate