விளையாட்டு

ஸ்ரீகாந்த் மீது கடும்கோபத்தில் உள்ள தோனியின் ரசிகர்கள் ஏன் தெரியுமா?

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஆட்டத்தில் படுதோல்வியை சிஎஸ்கே சந்தித்த நிலையில், அணியின் தேர்வை ஸ்ரீகாந்த் கடுமையாக சாடியுள்ளார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் 125 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே கேதர் ஜாதவ் அணியில் எதற்கு என்ற விமர்சனம் எழும்பியது, ஒரு வழியாக அணியில் இருந்து நீக்கப்பட்டார். 

அவருக்குப் பதிலாக ஜெகதீசன் அணியில் சேர்க்கப்பட்டார். ஒரு போட்டியோடு ஜெகதீசனை நீக்கிவிட்டு பியூஷ் சாவ்லா சேர்க்கப்பட்டார். அதன்பின் சாவ்லா நீக்கப்பட்டு மீண்டும் கேஜர் ஜாதவ் நீக்கப்பட்டது. இந்நிலையில் அணியின் தேர்வு கேலிக்கூத்தானது என்று ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில் ‘‘டோனி என்ன சொன்னாலும் இந்த நடைமுறையை நான் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டேன். 

இந்த நடைமுறை குறித்து அவர் பேசுவது அர்த்தம் இல்லாதது. செயல்முறை, செயல்முறை பற்றி பேசுகிறார்கள். ஆனால், தேர்வு செயல்முறை அதனாகவே தவறாகிவிட்டது. டோனியின் டீல் என்ன? நடராஜன் தீப்பொறியாக விளையாடவில்லை என்கிறார். ஆனால், கேதர் ஜாதவ் தீப்பொறியாக விளையாடினாரா?. இது கேலிக்கூத்தானது. அவருடைய பதிலை நான் ஏற்றுக் கொள்ளமாட்டேன். செயல்முறை பற்றி பேசும்போது, சென்னையின் தொடர் அதனாகவே முடிந்துவிட்டது.’’ என்றார். தோனியை கடுமையாக விமர்சித்த ஸ்ரீகாந்த் மீது தோனியின் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர். 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate