தமிழ்நாடு

சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் 44.4 லட்சம் ரூபா்ய மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு குறிப்பாக கேரளா மற்றும் தமிழகத்திற்கு அதிக அளவில் தங்கம் கடத்தி வரப்படுகிறது. இதை உன்னிப்பாக கவனித்து அதிகாரிகள் தங்கத்தை பறிமுதல் செய்வதோடு, அந்த நபர்களுக்கு தண்டையும் பெற்று கொடுக்கிறார்கள். இருப்பினும் அதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று கொண்டே இருக்கின்றன. இன்று துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு சிவகங்கையை சேர்ந்த நபர் வந்தார். அவர் மீது சந்தேகம் வர அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். 

அப்போது 44.4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் தங்கத்தை பறிமுதல் செய்ததுடன், அந்த நபரையும் கைது செய்துள்ளனர். சென்னை விமானநிலையத்தில் 45 லட்சம் மதிப்புடைய தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் விமானப்பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
29-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.84(லி) Diesel Rate
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4575 Gold Rate
8 கிராம்
Rupee 36600 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700