சினிமா

சிம்பு ரசிகர்களுக்கு குட் நியூஸ்: அக்டோபர் 22-ம் தேதி முக்கிய அறிவிப்பை வெளியிடும் சிம்பு

நடிகர் சிம்பு விரைவில் தனது பெயரில் யூ-ட்யூப் சேனல் ஒன்றை துவங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சிம்புவின் பீனீக் ரசிகர்கள் படுகுஷியாகி உள்ளனர்.

 
சென்னை: -

சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. இதன் படப்பிடிப்பு திண்டுக்கல்லைச் சுற்றியுள்ள பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தற்போது படு ஸ்லிம்மாக மாறியுள்ளார். 

சுசீந்திரன் படத்தை முடித்துவிட்டு, நவம்பர் முதல் வாரத்திலிருந்து வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் 'மாநாடு' படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார் என்று கூறப்படுகிறது.

SImbu Manadu To Kick Starts Again

சில வருடங்களுக்கு முன்பு அனைத்து சமூக ஊடகங்களிடம் இருந்து சிம்பு விலகினார். தற்போது அவர் எந்தவொரு சமூக ஊடகத்திலும் இல்லை. 

இந்நிலையில், மீண்டும் சமூக வலைதளத்துக்கு வர முடிவு செய்துள்ளார் சிம்பு. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு அக்டோபர் 22-ம் தேதி வெளிவரவுள்ளது. ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், என அனைத்திலுமே மீண்டும் சிம்பு இணையவுள்ளார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தார்கள்.

முக்கியமாக, சிம்பு விரைவில் தன்னுடைய பெயரில் யூட்யூப் சேனல் ஒன்றையும் தொடங்கவுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

மகாபிரபு நீங்க இங்கயும் வந்துடீங்களானு அவரது ரசிகர்கள் கேட்கும் அதேவேளையில், சிம்பு எப்போ ஷூட்டிங் வருவார் என்று தயாரிப்பாளர்கள் காத்துக்கிடக்கிறார்கள்.


Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee