அரசியல்

பிரதமர் மோடியின் இன்றைய உரை !!!

இன்று நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். அந்த உரையின் சிறப்பம்சங்கள் குறித்து காணலாம்.

புதுடெல்லி:-

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்திய மக்கள் நீண்ட தூரம் வந்துள்ளனர்.

ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், வைரஸ் இன்னும் முழுமையாக நீங்கவில்லை என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

கொரோனா போய்விட்டது என பொதுமக்கள் அலட்சியம் காட்டாமல் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும். வெளிநாடுகளில் கொரோனா குறைந்து விட்டது என்று நினைக்கையில் இன்னும் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கிறது.

அமெரிக்கா, பிரேசில் நாட்டில் பாதிப்பு இன்னும் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. இந்தியாவில் மேற்கொண்ட அதிகமான பரிசோதனை இந்த போரில் முக்கியமாக ஆயுதமாக இருந்தது. அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

அலட்சியமாக இருப்பவர்கள் அவர்கள் பாதிப்பதோடு மற்றவர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றனர்.

கடந்த 7-8 மாதங்களில் ஒவ்வொரு இந்தியரின் கடும் முயற்சியிலும், அர்பணிப்பாலும் இந்தியா தற்போது ஒரு நிலையான சூழ்நிலையில் உள்ளது, அதை மோசமடைய செய்து விடக்கூடாது.

கொரோனா பரவலால் பாதிக்கப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க, பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.

நம் பொறுப்புகளை நிறைவேற்ற ஒவ்வொரு நாளும் நம் வீடுகளை விட்டு வெளியேறுகிறோம். தற்போது நவராத்திரி, தீபாவளி, குரு நானக் ஜெயந்தி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகள் வருவதால் மக்கள் கூடுதல் கவனமோடு இருக்க வேண்டும்.

முகக்கவசம் அணிதலை அலட்சியப்படுத்தக் கூடாது, முகக்கவசத்தை புறக்கணிப்போர் மற்றவர்களுக்கும் தீங்கு விளைவிக்கிறார்கள்.

எனவே, மக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், வெளியே சென்று வருவோர் கட்டாயம் கைகளை சோப் கொண்டு கழுவ வேண்டும்.

மிக விரைவில், கொரோனா தடுப்பு மருந்து வந்துவிடும் அதுவரை மக்கள் மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என்று தனது உரையில் பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.12(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.56(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44407.28 43995.41
என்.எஸ்.இ
12914.30 13035.30
1 கிராம்
Rupee 4589 Gold Rate
8 கிராம்
Rupee 36712 Gold Rate
1 கிராம்
Rupee 64.70 Gold Rate
1 கிலோ
Rupee 64700 Gold Rate