சினிமா

காதல் கணவனை கைவிட்ட வனிதா: பீட்டர் பாலின் தற்போதைய நிலை என்ன தெரியுமா?

பிரபல சர்ச்சை நடிகை வனிதா அவரின் 4ஆவது கணவரான பீட்டர் பாலை கருத்து வேறுபாடு காரணமாக வீட்டை விட்டு விரட்டியுள்ளதாகவும் தனது காதல் மனைவி கைவிட்டதால் சென்னை சாலிகிராமத்தின் சாலைகளில் "காதல்" படத்தில் வரும் கிளைமாக்ஸ் பரத் போல சுற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வனிதா பீட்டர் பால் இந்த பெயருக்கு சமூக வலைத்தளங்களில் பஞ்சமில்லை.  திருமணமாகி 2 குழந்தைகளுக்கு அப்பாவான  பீட்டர் பால் என்ற நபரை 4ஆவது முறையாக வனிதா காதலித்து திருமணம் செய்துக்கொண்டார். 

எப்போது  வனிதா பீட்டரை திருமணம்  செய்தாரோ அந்த நாள்  முதல் யார் அந்த பீட்டர் பால் என்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.  பின்னர் பீட்டர் பாலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.  

பலத்த எதிர்ப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும்  மத்தியில் இந்த காதல் குயில்கள் இல்லற வாழ்க்கைக்குள் புகுந்து மிகவும் நெருக்கமான  புகைப்படங்களை  சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். 

இப்படியே நாட்கள் செல்ல நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக பீட்டர் பால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை பெற்று பின்னர் குணமாகினார்.  பீட்டருக்கு நெஞ்சு வலி என்ற செய்தி அவரின் ரசிகர்களுக்கு பேரிடியாய் விழுந்தது.   

சமீபத்தில் வனிதாவின்  40-வது பிறந்தநாளைக் கொண்டாட  குடும்பத்துடன் கோவாவிற்கு சென்று  அப்புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தனர் இந்த காதல் ஜோடிகள். இந்நிலையில் கோவாவில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதனால்  4ஆவது கணவரான பீட்டரை வனிதா வீட்டை விட்டு துரத்தி விட்டதாக தகவல்கள் வெளியாகின.  

மிகவும் இனிமையாக சென்றுக்கொண்டிருந்த இவர்களின் இல்லற வாழ்வில் பாவம் யார் கண் பட்டதோ என்று என்னும் அளவிற்கு  பேரிடியாய்  விழுந்துள்ளது இந்தச்செய்தி. 

இந்நிலையில் இதுக்குறித்து வனிதா உருக்கமான அறிக்கை  ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் 
" என் வாழ்க்கையில் பிரச்னைகள் ஒன்றும் புதிதல்ல.வாழ்க்கை ஒரு பாடம். அதில் நான் கற்றுக்கொண்டே இருக்கிறேன்..அன்பு தேவைப்பட்ட ஒருவருக்கு நான் அன்பு செலுத்தினேன். தற்போது, என் கனவுகளும், நம்பிக்கைகளும் நொறுங்கிய நிலையில் நிற்கிறேன். இதுவும் கடந்துபோகும் என்று நம்புவதாகவும்  குறிப்பிட்டுள்ளார். 

இதன் மூலம்  இருவரும் பிரிந்துவிட்டது வேதனை அளிப்பதாக நெட்டிசைன்கள் கூறி வருகின்றனர். 

மேலும் பீட்டர் போயாச்சு இனி அடுத்ததாக வனிதாவின் வசந்த காலங்களை நிரப்ப போகும் அந்த நபர்  யார் என்ற அப்டேட்டிற்காகவும்  காத்திருக்கின்றனர் அவரின் தீவிர ரசிகர்கள்...... 

வனிதா வீட்டை விட்டு விரட்டி விட்டதால்  பீட்டர் பால் காதல் பட  கிளைமாக்ஸில் வரும் பரத் போல சாலிகிராமத்தின் சாலைகளில்  சுற்றி வருவதாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee