Just In

உய்குர் இஸ்லாமியர்களின் குடும்ப வாழ்க்கையை சிதைக்கும் சீனா- சமூக ஆர்வலர்கள் வேதனை

ஜின்ஜியாங் மாகாணத்தில் உள்ள உய்குர் முஸ்லீம் மக்களின் குடும்ப வாழ்க்கையின் அடிப்படையையே சீன கம்யூனிச அரசு அழித்து வருவதாக சர்வதேச நிபுணர்களும், சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஜின்ஜியாங்:-

சீனாவின் வட மேற்கில் உள்ள ஜின்ஜியாங் மாகாணம் ஒரு தன்னாட்சி பிராந்தியம் ஆகும். இந்த பிராந்தியத்தை ஆக்கிரமித்துள்ள சீனா அந்த மண்ணின் பூர்வ குடிமக்களான உய்குர் முஸ்லிம்கள் மீது ஏராளமான அடக்குமுறைகள் மற்றும் ஒடுக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டுள்ளது.

இந்நிலையில் அந்தப் பிராந்தியத்தில் புவியியல் ரீதியான மாற்றங்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் உய்குர் முஸ்லிம்களின் குடும்ப வாழ்க்கையின் அடிப்படையே சிதைக்கும் வேளையிலும் சீனா ஈடுபட்டுள்ளதாக அன்ஹெர்ட் இணையதளத்தின் அசோசியேட் எடிட்டரும், சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலருமான பீட்டர் பிராங்களின் கூறியுள்ளார்.

இன அழிப்பின் ஒரு பகுதியாகவும் உய்குர் இன பெண்களுக்கு கம்யூனிச அரசால் கட்டாய கருக்கலைப்பு செய்யப்படுகின்றது. மேலும் உய்குர் இன ஆண், பெண் இருபாலருக்கும் கட்டாய கருத்தடையும் செய்வதாக பீட்டர் பிராங்களின் கூறியுள்ளார்.

ஜின்ஜியாங் பிராந்தியத்தில் சீனாவின் முக்கிய ஆதிக்க இனமான ஹன் இனமக்களின் குடியேற்றங்களை ஏற்படுத்தி வரும் அதேவேளையில் அரசு மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகள் மூலம் உய்குர் மக்களின் பிறப்பு விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது. இதன் மூலமாக இந்தப் பிராந்தியத்தின் பூர்வகுடிகளின் மக்கள்தொகையே அடியோடு மாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளது. 

ஜின்ஜியாங் பிராந்தியத்தில் சீனா அமல்படுத்தி உள்ள குடும்ப கொள்கை என்பது ஒரு புதிய சமுதாயத்தை உருவாக்குவது அல்ல, மாறாக ஒரு பழைய சமுதாயத்தை அடியோடு அழிப்பது என்று பீட்டர் கூறியுள்ளார்.

அதோடு திபெத்திலும் இதே உத்தியை கம்யூனிச சீன அரசு கையாண்டு வருகிறது என்றும் பீட்டர்  கூறியுள்ளார். 

உய்குர் இன முஸ்லிம்கள் மீது சீன கம்யூனிச அரசு இத்தனை அடக்குமுறைகள் ஒடுக்குமுறைகளையும் கையாண்டு வருகிறது. சீனாவின் இந்த மனித உரிமை மீறல்களையும் ஐநா சபை உள்ளிட்ட எந்த ஒரு சர்வதேச அமைப்புகளும் இதுவரையில் கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் ஆச்சரியத்தையும் அதேசமயம் வேதனையையும் ஏற்படுத்தி உள்ளதாக சர்வதேச நிபுணர்களும், மனித உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
29-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.84(லி) Diesel Rate
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4575 Gold Rate
8 கிராம்
Rupee 36600 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700