உலகம்

தெற்கு சோமாலியாவில் நடந்த மோதலில் 18 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்

சோமாலியாவில் ராணுவத்தினர் மேற்கொண்ட தேடுதல் வேட்டையின் போது நடைபெற்ற மோதலில் 18 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

மொகதிஷு:-

ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் ஏராளமான ஆயுதம் ஏந்திய போராளி குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சோமாலியாவின் தெற்கு பிராந்தியத்தில் உள்ள லோயர் ஷாபெல்லின், பாரிர் நகரில் அல்-ஷபாப் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து 143வது படைப்பிரிவு கமாண்டர் அஹ்மத் ஹாசன் ஜியாத் தலைமையில் சோமாலிய தேசிய ராணுவத்தினர் அதிரடி தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.

Somali military 'kills over 18 Al-Shabaab militants' – Middle East Monitor

இந்த தேடுதல் வேட்டையின் போது அல் ஷபாப் தீவிரவாத குழுக்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் 18 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதுகுறித்து கமாண்டர் அஹ்மத் ஹாசன் ஜியாத் கூறுகையில்:-

இந்த பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலையடுத்து தேடுதல் வேட்டை மேற்கொண்டோம். அப்போது  தீவிரவாதிகள் ராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்தினார்கள். அதற்கு பதில் தாக்குதல் நடத்தியதில் 18 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். மேலும் சில தீவிரவாதிகளுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் லோயர் ஷாபெல் பிராந்தியத்தின் அல்-ஷபாப் தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தளபதியான சிடோ நூர் அபு முஹ்சின் கொல்லப்பட்டான் என்று கூறினார்.

சோமாலியாவின் தெற்குப் பிராந்தியத்தில் அல்-ஷபாப் தீவிரவாத குழுவினரின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த தீவிரவாத குழுவினர் கண்ணிவெடிகள் மூலம் ராணுவத்தினரை குறிவைத்து தாக்குதல்களை நடத்தி வருகிறார்கள். 

இந்நிலையில் சமீபகாலமாக இந்த தீவிரவாத குழுக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் சோமாலியா அரசு கடும் நடவடிக்கைகள் எடுத்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee