சினிமா

பருத்திவீரனுக்கு பிறந்த வீரன் - ரசிகர்கள் மகிழ்ச்சி

தமிழில் முன்னணி நடிகராக வலம் வரும் கார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு குழந்தை பிறந்தது. இதனால் கார்த்தியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி. முதல் படத்திலேயே முத்திரை பதித்த அவர், தொடர்ந்து பையா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, மெட்ராஸ் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகராக உயர்ந்தார். 

இவர் கடந்த 2011-ம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துக்கொண்டார்.  இந்த தம்பதிக்கு கடந்த 2013ம் ஆண்டு உமையாள் என்ற பெண் குழந்தை பிறந்தது. அதையடுத்து சுமார் 7 ஆண்டுகள் கழித்து தற்போது கார்த்தி - ரஞ்சனி தம்பதினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. 

இதை நடிகர் கார்த்தி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். இதன் மூலம் பிருத்திவீரனுக்கு வீரன் பிறந்திருப்பதாக நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர். 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate