உலகம்

சீனாவின் ஹூவாவேக்கு தடை விதித்தது ஸ்வீடன்

5 ஜி நெட்வொர்க் சேவை வழங்கும் சீனாவின் ஹவாய் மற்றும் இசட்இஇ ஆகியவற்றின் தொலைதொடர்பு சாதனங்களை பயன்படுத்த தடை விதிக்கப்படுவதாக ஸ்வீடன் அரசு உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்காவின் அழுத்தத்தைத் தொடர்ந்து, 5 ஜி சேவை வழங்கும் சீன நிறுவனங்கள் மீது ஐரோப்பிய அரசாங்கங்கள் கட்டுப்பாடுகளை கடுமையாக்கி வருகின்றன. இந்நிலையில் சீனாவின் ஹூவாய் உபகரணங்களை சீனா உளவு பார்க்க பயன்படுத்தலாம் என்ற குற்றசாட்டு எழுந்துள்ளதை தொடர்ந்து சுவீடனின் போஸ்ட் மற்றும் டெலிகாம் ஆணையம் ஹூவாய் உபகரணங்களை தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும், ஸ்வீடனின் 5 ஜி நெட்வொர்க் சேவை வழங்க Hi3G Access, Net4Mobility, Telia Sverige மற்றும் Teracom ஆகிய நான்கு நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும், அவற்றிற்கு உரிமம் வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஜூலை மாதம் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் வரும்  2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள் ஹவாய் உபகரணங்களை பிரிட்டனின் 5 ஜி நெட்வொர்க்கிலிருந்து முற்றிலும் அகற்ற உத்தரவிட்டார்.

அதேபோல, அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஐரோப்பிய யூனியனும் சீனாவின் ஹூவாய் நிறுவனத்தை விரைவில் அகற்ற நடவடிக்கைகள் எடுக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee