தமிழ்நாடு

மயில்களுக்கு விஷம் வைத்த விவசாயி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விஷம் வைத்து 3 மயில்கள் சாகடிக்கப்பட்டது குறித்து விவசாயி ஒருவரிடம் வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சூடிபுதூர் பகுதியில் 3 பெண் மயில்கள் இறந்து கிடப்பதாக ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை அதிகாரி சுப்பிரமணியனுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் வனத்துறையினர் அப்பகுதிக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது அங்குள்ள விவசாய நிலம் அருகே 3 மயில்கள் இறந்து கிடந்தன. அந்த மயில்களின் உடல்களை கைப்பற்றிய வனத்துறையினர் கால்நடை மருத்துவர் மூலம் பரிசோதனை மேற்கொண்டனர்.

மேலும் மயில்கள் எப்படி இறந்தன என்பது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தினர். இதில் அப்பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் தனது வயல்காட்டில் மக்காச்சோளத்தை சேதப்படுத்தியதால் அரிசியில் குருணை மருந்து கலந்து வைத்தது தெரிய வந்தது. இதனை சாப்பிட்ட 3 மயில்களும் இறந்துள்ளன. இதனைத் தொடர்ந்து வனத்துறையினர் மயில்களுக்கு விஷம் வைத்த அந்த விவசாயியை பிடித்து வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வாய்யில்லா ஜீவனுக்கு விஷம் வைத்து கொன்ற நிகழ்வு அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee