உலகம்

அமெரிக்கா-இந்தியா ஒத்துழைப்பு: இந்திய ராணுவ துணைத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் எஸ்.கே. சைனி அமெரிக்கா பயணம்

இந்திய ராணுவத்தின் துணைத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் எஸ்.கே. சைனி அமெரிக்க இராணுவத்தின் 25 வது காலாட்படை பிரிவு லைட்னிக் அகாடமிக்குச் சென்று அங்குள்ள அதிகாரிகளுடன் பாதுகாப்புத் துறையில் இந்தியா அமெரிக்கா இடையே ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை.

வாஷிங்டன்:- 

இந்தியா-அமெரிக்கா இடையே இராணுவ ஒத்துழைப்பை வலுப்படுத்துவது தொடர்பாக, இந்திய ராணுவத்தின் துணைத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் எஸ்.கே. சைனி 3 நாள் பயணமாக இன்று (அக்டோபர் 20) அமெரிக்க இராணுவத்தின் 25 வது காலாட்படை பிரிவின்  லைட்னிக் அகாடமிக்கு சென்று அமெரிக்க ராணுவத்தின் உயரதிகரிகளுடன் ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின் போது அடர்வன பயிற்சி மற்றும் சினூக் வகை ஹெலிகாப்டர் இயக்குவது தொடர்பானவற்றில் கலந்துகொண்டார். 

அதோடு , லெப்டினென்ட் ஜெனரல் சைனி யு.எஸ்.இண்டோபாகாம் (USINDOPACOM) தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் ரொனால்ட் பி. கிளார்க்கை சந்தித்து அமெரிக்கா-இந்தியா பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதித்தார்.இந்தியா-அமெரிக்கா இரு நாடுகளும் தங்களது ராணுவ ஒத்துழைப்பை விரிவாக்கம் செய்வது தொடர்பான  இரண்டு-பிளஸ்-இரண்டு சந்திப்புக்கு முன்னதாக  துணைத் தளபதி லெப்டினென்ட் ஜெனரல் எஸ்.கே. சைனி பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee