Just In

நெட்டிசன்களை குழப்பத்தில் ஆழ்த்திய பச்சோந்தி வீடியோ!!!!!

பச்சோந்தி ஒன்று குட்டியைப் பெற்றெடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பி பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

புதுடெல்லி:-

ஒரு பச்சோந்தி தன் குட்டியைப்  பெற்றெடுப்பதை நீங்கள் எப்போதாவது பார்த்தீர்களா? பச்சோந்தியின் இனத்தைப் பொறுத்து, அவை முட்டையிடலாம் அல்லது குட்டியை உடலுக்குள் சுமந்து செல்லலாம், நேரம் வரும்போது அவற்றைப் பெற்றெடுக்கலாம் என்பது உங்களுக்குத் தெரியுமா?, தற்போது  ஒரு பச்சோந்தி தனது குட்டியைப்  பெற்றெடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

பூமியில் பல்வேறு உயிரினங்கள் வசிக்கின்றன, அவற்றில் பல ஆச்சரியங்களும் நிறைந்துள்ளன. அதேபோல பல ஆச்சரியங்கள் நிறைந்தவன் மனிதன். அடிக்கடி குணங்களை மாற்றி, சூழலுக்கேற்றபடி தங்களை தக்க வைத்து கொள்பவர்களை பச்சோந்தி என கூற கேள்விபட்டிருப்போம். 

ஆனால் பச்சோந்திகள் எதிரிகளிடம் இருந்து தங்களை காத்து கொள்ளவே, நிறம் மாறும்.  பச்சோந்தி இனங்கள் பல்லிகளை போன்று முட்டைகளை இட கூடியவை.  ஆனாலும் குஞ்சுகளை உடலில் சுமந்து நேரம் வரும்பொழுது, குட்டிகளை ஈனும் தன்மையையும் அவை கொண்டிருக்கின்றன என்பது இயற்கையின் வினோதம்.


இதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் வெளியான வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.  அதில், பச்சோந்தி ஒன்று குட்டியை ஈனும் காட்சி இடம்பெற்றுள்ளது.  அந்த வீடியோவில் மரம் ஒன்றில், அதன் கிளையை பற்றி பிடித்தபடி பச்சோந்தி ஒன்று நின்றவாறு உள்ளது.

சிறிது நேரம் சென்ற பின்னர் அது தனது குட்டியை ஈன்றது.  இதில் ஆச்சரியம் என்னவெனில், தொடக்கத்தில் பந்து வடிவத்தில் இருந்த அந்த குட்டியானது, மர கிளை வழியே உருண்டு பின் கீழே விழுகிறது.

ஆனால் நல்ல வேளையாக கிளையில் இருந்த இலை ஒன்றின் மேல் அது விழுந்துள்ளது.  அதுவும் கிழிந்த இலை.  பின்பு அந்த பந்து விரிந்து குட்டி பச்சோந்தியாக உருப்பெறுகிறது.

உலகை முதன்முறையாக காணும் அந்த குட்டி பச்சோந்தி சுறுசுறுப்புடன் தனது முன்னங்கால்களை நீட்டி அருகேயுள்ள இலையை பற்றி கொள்ள முயற்சிக்கிறது.  ஆனால் அது தோல்வியில் முடிய இருந்த இலையிலேயே தொற்றி கொள்கிறது. இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate