தமிழ்நாடு

சென்னையில் இன்று முதல் பண்ணை பசுமை கடைகளில் ரூ.45க்கு பெரிய வெங்காயம் விற்பனை

சென்னை மற்றும் அனைத்து மாநகராட்சிப் பகுதிகளிலும் உள்ள பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நகரும் பண்ணைப் பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக கிலோ ரூ.45 என்ற விலையில் தரமான வெங்காயம் இன்று (21-ம் தேதி) முதல் விற்பனை செய்யப்படும் என்று அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தெரிவித்தார்.

இந்தியாவில், மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில்தான் அதிக அளவில் பெரிய வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இதில் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் அண்மையில் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் வெங்காயப் பயிர்கள் 75% அளவுக்கு அழிந்துவிட்டன. இதனால், வெங்காயம் வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இன்னும் 10 நாட்களில் வெங்காயத்தின் விலை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர். 

எனவே வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தி, நுகர்வோருக்கு குறைந்த விலையில் வெங்காயம் விற்பனை செய்திட முதல்வர் உத்தரவிட்டதன் அடிப்படையில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் மற்றும் துறை உயர் அலுவலர்கள் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பசுமைப் பண்ணை கடைகள் மூலம் இன்று முதல் சென்னையிலும், தமிழகம் முழுவதும் நாளை முதல் பெரிய வெங்காயம் கிலோ ரூ.45-க்கு விற்பனை செய்ய அரசு முடிவு எடுத்துள்ளது 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
29-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.84(லி) Diesel Rate
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4575 Gold Rate
8 கிராம்
Rupee 36600 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700