இந்தியா

தொடர் தோல்வியிலிருந்து மீண்டெழுந்த பஞ்சாப்: 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வென்றது

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் 38-வது போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இப்போட்டியில் பஞ்சாப் அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வென்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐ.பி.எல். 2020 கிரிக்கெட் போட்டியின் 38-வது போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. 

டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. பிரித்வி ஷா, தவான் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.பிரித்வி ஷா 7 ரன்னிலும், ஷ்ரேயாஸ் அய்யர் 14 ரன்னிலும், ரிஷப் பண்ட் 14 ரன்னிலும், ஸ்டாய்னிஸ் 9 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் சேர்த்தது. தவான் 61 பந்தில் 106 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

165 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ராகுல் 15 ரன்னிலும், அகர்வால் 5 ரன்னிலும் அவுட்டாகினர். அடுத்து இறங்கிய கிறிஸ் கெயில் ஒரே ஓவரில் 24 ரன்கள் எடுத்து அசத்தினார். அவர் 29  ரன்னில் வெளியேறினார். ஆட்ட நேர முடிவில் 6 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் சேர்த்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
24-Nov-2020
பெட்ரோல்
Rupee 0(லி) Diesel Rate
டீசல்
Rupee 0(லி) Diesel Rate
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee Gold Rate
8 கிராம்
Rupee Gold Rate
1 கிராம்
Rupee Gold Rate
1 கிலோ
Rupee Gold Rate