உலகம்

மழையில் நடனம்: தேர்தல் களத்தை கலக்கும் கமலா ஹாரிஸ்

அமெரிக்காவில் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் கமலா ஹாரிஸ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் அவர் புளோரிடா மாகாணம் ஜாக்சன்வில்லே நகரில் ஆதரவாளர்கள் மத்தியில் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென அங்கு மழை பெய்ததது. மழையையும் பொருட்படுத்தாமல் கமலா ஹாரிஸ் குடையை பிடித்துக் கொண்டு தனது பிரசாரத்தை தொடர்ந்தார்.

அமெரிக்காவில் வரும் 3ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அதிபர் டிரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயக கட்சியின் துணை அதிபர் பதவிக்கு தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார்.

தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் கமலா ஹாரிஸ் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று முன்தினம் அவர் புளோரிடா மாகாணம் ஜாக்சன்வில்லே நகரில் ஆதரவாளர்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திடீரென அங்கு மழை பெய்ததது. 

மழையையும் பொருட்படுத்தாமல் கமலா ஹாரிஸ் குடையை பிடித்துக் கொண்டு தனது பிரசாரத்தை தொடர்ந்தார். அப்போது அவர் தனது ஆதரவாளர்களை உற்சாகப்படுத்தும் விதமாக குடையை பிடித்தபடியே மழையில் நடனமாடினார். இதை அவரது ஆதரவாளர்கள் பலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். தற்போது அந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இதனிடையே குடையுடன் தான் நடனமாடும் புகைப்படத்தை கமலா ஹாரிஸ் டுவிட்டரில் பகிர்ந்து “மழையோ அல்லது வெயிலோ ஜனநாயகம் யாருக்காகவும் காத்திருக்காது” என பதிவிட்டுள்ளார்.
Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
29-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.84(லி) Diesel Rate
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4575 Gold Rate
8 கிராம்
Rupee 36600 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700