கல்வி & வேலைவாய்ப்ப

"ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழின் செல்லுபடி காலம் ஏழு வருடங்கள் வரை அல்ல, இனிமேல் ஆயுட்காலம் வரை செல்லும்!"

ஏழு வருடங்கள் மட்டுமே செல்லுபடியாகும் என சொல்லப்பட்டிருந்த ஆசிரியர் தகுதி தேர்வு சான்றிதழான 'டெட்' இனி வாழ்நாள் முழுவதும் செல்லும் என்று அறிவித்துள்ளது தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம். தமிழகத்தைப் பொறத்தவரை 80 ஆயிரம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் நீட்டிப்பு கோரி போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியிருப்பது மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் 50ஆவது பொதுக்குழு கூட்டம் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி, நடைபெற்றது. அதில், ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழை வாழ்நாள் முழுவதும் செல்லும் வகையில் கால அவகாசம் நீட்டிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்த சான்றிதழ் 7 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லும் என்று விதியில் திருத்தம் செய்திருக்கிறது. இந்த புதிய நடைமுறை உடனடியாக அமலுக்கு வரும் என்றும் தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம் அறிவித்திருந்தது. இதன்படி இனிவரும் நாட்களில் தேர்வு எழுதுவோருக்கு வாழ்நாள் சான்றிதழ் வழங்கப்படும் என்றும், இதற்கு முன் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாழ்நாள் வரை சான்றிதழ் நீட்டிப்பு வழங்குவது குறித்து சட்ட ஆலோசனை நடத்தி பின்னர் முடிவெடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு ஆசிரியர் பணிக்காக காத்திருக்கும் நபர்களுக்கு மகிழ்ச்சிகரமான அறிவிப்பாக அமைந்துள்ளது.

தமிழகத்தைப் பொறத்தவரை 80 ஆயிரம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் நீட்டிப்பு கோரி போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. எனவே டெட் தேர்வு வாழ்நாள் சான்றிதழ் தொடர்பாகத் தமிழக அரசு சார்பில் விரைவில் அறிவிப்பு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
14-Jun-2021
பெட்ரோல்
Rupee 0(லி)
டீசல்
Rupee 0(லி)
பி.எஸ்.இ
என்.எஸ்.இ
1 கிராம்
Rupee
8 கிராம்
Rupee
1 கிராம்
Rupee
1 கிலோ
Rupee