லைப் ஸ்டைல்

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸை வைத்து மோசடியில் ஈடுப்பட்டு வரும் மர்ம கும்பல்

ஆன்லைன் மூலம் நிறைய வழிகளில் மர்ம கும்பல்கள் பணமோசடியில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸை வைத்து சில கும்பல் பண மோசடியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

போலி கால் சென்டர்கள் நடத்தி வங்கிக் கடன் வாங்கி தருவதாக மோசடி செய்யும் கும்பல் வங்கி மேலாளர் போல பேசி கிரடிட் கார்டு எண்கள் மற்றும் ரகசிய குறியீட்டு எண்களை பெற்று மோசடி செய்யும் கும்பல் போன்றவற்றை போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்த நிலையில் ஆன்லைன் மோசடி கும்பல் பணத்தை சுருட்ட பல  புதிய யுத்திகளை கையாண்டு வருகின்றனர். 

அதாவது வாட்ஸ் அப் செயலியை பயன் படுத்துவோர் தங்கள் படங்கள் மற்றும் இயற்கை காட்சிகள் மற்றும் வீடியோக்களை ஸ்டேட்டஸ் ஆக வைப்பர். அதை அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பார்ப்பார்கள். அவ்வாறு வைக்கப்படும் ஸ்டேட்டஸ்களை 30 நபர்களுக்கு மேல் பார்த்தால் தினமும் 500 ரூபாய் சம்பாதிக்கலாம். 

இந்த பணத்தை உங்கள் வங்கிக் கணக்கு அனுப்பி வைக்கப்படும். நாங்கள் இதன் முகவர்களாக இருக்கிறோம் உங்களைப் பற்றிய விவரங்களைக் கொடுங்கள் என மர்ம நபர்கள் பலரின் மொபைல் போனில் தொடர்பு கொண்டு மூளைச்சலவை செய்து விபரங்கள் பெற்று விடுகின்றனர். அந்த விவரங்கள் வாயிலாக வங்கியிலிருந்து பணத்தை அபகரிக்கும் நூதன மோசடியில் மர்ம கும்பல் ஈடுபட்டு வருகிறது. 

இது குறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில் ஆன்லைன் மோசடிக் கும்பல்கள் உழைக்காமல் சம்பாதிப்பது எப்படி என ஆசை காட்டி பணத்தை சுருட்டி வருஷம்தான் பொதுமக்கள் இதுபோன்ற மோசடி கும்பல்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள்  தொடர்பு கொண்டால் உடனடியாக போலீசாரிடம் புகார் அளிக்க வேண்டும் என போலீசார் தரப்பில் கூறுகின்றனர்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
25-Nov-2020
பெட்ரோல்
Rupee 84.64(லி) Diesel Rate
டீசல்
Rupee 76.88(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44601.63 44247.12
என்.எஸ்.இ
12978.00 13079.10
1 கிராம்
Rupee 4640 Gold Rate
8 கிராம்
Rupee 37120 Gold Rate
1 கிராம்
Rupee 64.50 Gold Rate
1 கிலோ
Rupee 64500 Gold Rate