விளையாட்டு

கொல்கத்தாவை சூறையாடிய ஆர்.சி.பி

85 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்த நிலையில், 13.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்து ஆர்சிபி அபார வெற்றி பெற்றது.

ஐபிஎல் தொடரின் 39-வது லீக் ஆட்டம் அபு தாபியில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட்ரைடர்ஸ் 84 ரன்களே அடித்தது. 

மோர்கன் அதிகபட்சமாக 30 ரன்கள் அடித்தார். ஆர்சிபி அணியில் முகமது சிராஜ் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 85 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்சிபி அணியின் தேவ்தத் படிக்கல், ஆரோன் பிஞ்ச் ஆகியோர் களம் இறங்கினர். 

தேவ்தத் படிக்கல் 25 ரன்னிலும், பிஞ்ச் 16 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்த ஜோடி 6.2 ஓவரில் 46 ரன்கள் சேர்த்தது. அதன்பின் வந்த குர்கீரத் சிங் மான் 21 ரன்களும், விராட் கோலி 18 ரன்களும் அடிக்க ஆர்சிபி 13.3 ஓவரில் 85 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இதன் மூலம் ஆர்.சி.பியின் ரசிகர்கள் மகிழ்ச்சி உறைந்துள்ளனர். 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
01-Dec-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
44470.26 44118.10
என்.எஸ்.இ
12962.80 13064.20
1 கிராம்
Rupee 4520 Gold Rate
8 கிராம்
Rupee 36160 Gold Rate
1 கிராம்
Rupee 63.30 Gold Rate
1 கிலோ
Rupee 63300 Gold Rate