விளையாட்டு

ஆர்சிபியா இது நம்பவே முடியலயே.... ரசிகர்களால் மறக்கமுடியாத ஆட்டம்

அபுதாபியில் உள்ள சேக் சையீது மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டித் தொடரின் 39-வது லீக் ஆட்டத்தில் இயன் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் , விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. 13.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 85 ரன்கள் எடுத்து பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

அபுதாபியில் உள்ள சேக் சையீது மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். போட்டித் தொடரின் 39-வது லீக் ஆட்டத்தில் இயன் மார்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் , விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின.

போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி கேப்டன் இயன் மார்கன் பேட்டிங்கை தேர்வு செய்தார். அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மன் கில் மற்றும் ராகுல் திரிபாதி களமிறங்கினர். பெங்களூரு அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் கொல்கத்தா அணி வீரர்கள் தடுமாறினர்.  இறுதியாக 20 ஓவர் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை சேர்த்தது. ஐபிஎல் வரலாற்றில் மிக குறைந்த ரன்களை கொல்கத்தா அணி பதிவு செய்தது.அணியில் அதிகபட்சமாக கேப்டன் இயன் மார்கன் 30 ரன்கள் எடுத்திருந்தார்.  

பின் களமிறங்கிய 85 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி இறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ்  பெங்களூரு அணி, எந்த சிரமமும்  இன்றி கொல்கத்தா பந்து வீச்சை எதிர்கொண்டது.  13.3 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 85 ரன்கள் எடுத்து  பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் 14 புள்ளிகளுடன் பெங்களூரு அணி புள்ளிப் பட்டியலில்  2- ஆம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4576 Gold Rate
8 கிராம்
Rupee 36608 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700