தொழில்நுட்பம்

நோக்கியா 4ஜி பீச்சர் போன்கள் இந்தியாவில் அறிமுகம்!!

ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் இந்தியாவில் நோக்கியா 215 4ஜி மற்றும் நோக்கியா 225 4ஜி மொபைல் போன்களை அறிமுகம் செய்துள்ளன. இரு மாடல்களில் 4ஜி மட்டுமின்றி வயர்லெஸ் எப்எம் ரேடியோ வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

இரு மாடல்களிலும் 2.4 இன்ச் QVGA LCD ஸ்கிரீன், பாலிகார்பனைட் பாடி, வெப் பிரவுசர், ப்ளூடூத் வசதி, டார்ச், வயர்லெஸ் எப்எம் ரேடியோ, மியூசிக் பிளேயர், ஸ்னேக் கேம் உள்ளிட்டவை அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கிறது. நோக்கியா 225 4ஜி மாடலில் விஜிஏ கேமராவும் வழங்கப்பட்டு உள்ளது.நோக்கியா 215 மற்றும் 225 4ஜி சிறப்பம்சங்கள்:-

 • 2.4 இன்ச் 320x240 பிக்சல் QVGA LCD ஸ்கிரீன்
 • பீச்சர் ஒஎஸ்
 • 1 ஜிகாஹெர்ட்ஸ் யுனிசாக் பிராசஸர்
 • 64 எம்பி ரேம்
 • 128 எம்பி மெமரி
 • மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
 • 3.5 எம்எம் ஆடியோ ஜாக்
 • வயர்லெஸ் எப்எம் ரேடியோ, எம்பி3 பிளேயர்
 • விஜிஏ கேமரா ( நோக்கியா 225 4ஜி)
 • ப்ளூடூத், மைக்ரோ யுஎஸ்பி
 • 1200 எம்ஏஹெச் பேட்டரி

நோக்கியா 215 4ஜி மாடல் சியான் கிரீன் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 2949 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. நோக்கியா 225 4ஜி மாடல் கிளாசிக் புளூ, பிளாக் மற்றும் மெட்டாலிக் சேண்ட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3,499 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
28-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.12(லி) Diesel Rate
டீசல்
Rupee 77.56(லி) Diesel Rate
பி.எஸ்.இ
44407.28 43995.41
என்.எஸ்.இ
12914.30 13035.30
1 கிராம்
Rupee 4589 Gold Rate
8 கிராம்
Rupee 36712 Gold Rate
1 கிராம்
Rupee 64.70 Gold Rate
1 கிலோ
Rupee 64700 Gold Rate