விளையாட்டு

பாரீஸ் மாஸ்டர்சிலிருந்து விலகினார் ‘நம்பர் ஒன்' வீரர் நோவக் ஜோகோவிச்

பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை பிரான்சில் நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான 33 வயதான நோவக் ஜோகோவிச் (செர்பியா) விலகியுள்ளார்.

பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் இந்த வருடத்தை வெற்றியோடுதான் தொடங்கினார். ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் பிப்ரவரி மாதம் நடைபெற்றது . இதல் ஆண்கள் ஒற்றையர் பிரிவில்    ஆஸ்திரியாவின் டாமினிக் தியம்மை வீழ்த்தி நோவக் ஜோகோவிச் பட்டத்தை வென்றார். அதன்பின் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடந்தது. இதில்  ஜோகோவிச் அடித்த பந்து அங்கிருந்த நடுவரின் மீது பட்டதில் அவர் காயமடைந்தார். இதனால் போட்டி விதிகளின் படி ஜோகோவிச் அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.அக்டோபரில் நடந்த பிரெஞ்ச் ஓபன் டென்னிஸில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் 12 முறை சாம்பியனும், உலக தரவரிசையில் முதலிடம் வகிக்கும் செர்பியாவின் ஜோகோவிச்சை நடால் எதிர்த்து விளையாடினார். விறுவிறுப்பாக நடந்த போட்டியில் நடால் 6-0, 6-2, 7-5 என நேர்செட் கணக்கில் ஜோகோவிச்சை வீழ்த்தி  சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்நிலையில் பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி அடுத்த மாதம் (நவம்பர்) 2-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை பிரான்சில் நடக்கிறது. இந்த போட்டியில் இருந்து நடப்பு சாம்பியனும், ‘நம்பர் ஒன்’ வீரருமான 33 வயதான நோவக் ஜோகோவிச் (செர்பியா) விலகியுள்ளார்.
அதற்கு பதிலாக 26-ந்தேதி முதல் நவம்பர் 1-ந்தேதிவரை வியன்னாவில் நடக்கும் போட்டியிலும், நவம்பர் 15-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை லண்டனில் நடக்கும் ஏ.டி.பி. இறுதி சுற்றிலும் கலந்து கொள்ள முடிவு செய்திருப்பதாக அவர் தெரிவித்து இருக்கிறார். 

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4576 Gold Rate
8 கிராம்
Rupee 36608 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700