Just In

பீகார் தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசம், மேலும் பல முக்கிய வாக்குறுதிகளுடன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது பாரதிய ஜனதா !!

பீகார் சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றால் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று பாஜக தேர்தல் வாக்குறியில் தெரிவித்துள்ளது. பாஜக அறிக்கையை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார்.

பீகார் மாநிலத்தில் மூன்று கட்டங்களாக அக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெற இருக்கிறது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகிறது. அக்டோபர் 28-ஆம் தேதி மொத்தம் 71 தொகுதிகளில் முதல் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. 

இத்தொகுதிகளில் அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்று வருகிறது. 2-வது கட்டமாக நவம்பர் 3-ஆம் தேதியன்று 94 தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படுகிறது. மீதமுள்ள தொகுதிகளுக்கு நவம்பர் 7-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பீகாரில் மொத்தம் உள்ள 243 தொகுதிகளில் ஜேடியூ-பாஜக கூட்டணியில் பாஜக 121 தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஜேடியூ 122 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. கூட்டணி கட்சியான ஹெச்.ஏ.எம்க்கு 7 தொகுதிகளை ஜேடியூ ஒதுக்கியுள்ளது.


பீகார் சட்டசபை தேர்தலுக்கான தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை பாரதிய ஜனதா கட்சி இன்று வெளியிட்டது. மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். பாஜக போட்டியிடும் தொகுதிகள் ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்துள்ள பாஜக 243 தொகுதிகளில், 121 இடங்களில் போட்டியிடுகிறது. 


மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:-

  • பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்றால், அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும்.
  • பீகாரின் நகர் மற்றும் கிராமங்களில் 2022ம் ஆண்டுக்குள் 30 லட்சம் மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும்.
  • பீகாரில் மருத்துவம் பொறியியல் படிப்புகள் இந்தி மொழியில் கற்பிக்கப்படும். புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசுகையில், ‘பீகாரில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் உயர்ந்துள்ளது. கடந்த 15 ஆண்டு கால தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் 3 சதவீதத்தில் இருந்து 11.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஆனால், முந்தைய ஆட்சியில் வளர்ச்சி அடையவில்லை. எங்கள் அரசு மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதற்கு முன்னுரிமை அளித்ததால் இந்த வளர்ச்சி சாத்தியமானது’ என்றார்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4576 Gold Rate
8 கிராம்
Rupee 36608 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700