Just In

'நெற்றிக்கண்' படத்தின் ஃபஸ்ட் லுக் இதோ! 'நானும் ரவுடி தான்' படம் மட்டுமல்ல, நயன்-விக்னேஷ் காதலும் ஐந்தாம் ஆண்டை கடக்கிறதாம்!

நானும் ரவுடி தான் படம் வெளிவந்து ஐந்தாம் ஆண்டு நிறைவடைந்ததை அடுத்து 'நெற்றிக்கண்' படத்திற்கான ஃபஸ்ட் லுக் நாளை வெளிவரவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. 'நானும் ரவுடி தான்' படம் மட்டுமல்ல விக்னேஷ்-நயன் காதலும் ஐந்தாம் ஆண்டை கடக்கிறதாம் என அவர்களின் ரசிகர் படை கலாய்த்துவருகின்றனர்.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி-நயன்தாரா நடிப்பில் ’நானும் ரவுடிதான்’ திரைப்படம் வெளியாகி நேற்றோடு 5 வருடங்கள் நிறைவடைந்தது. ஐந்து வருட நிறைவு நாளை ரசிகர்கள் ஒரு பக்கம் கொண்டாடி வரும் நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் புதிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். அதுதான், தனது தயாரிப்பில் நயன்தாரா நடிக்க உள்ள ’நெற்றிக்கண்’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (22.10.2020) வெளியாகவுள்ள தகவல். 

இது குறித்து விக்னேஷ் சிவன் தெரிவிக்கையில், "‘நானும் ரவுடிதான்’ வெளிவந்து 5 வருடங்கள் நிறைவடைந்துவிட்டது. அளவில்லா அன்பு மற்றும் பேராதரவால் ’நானும் ரவுடிதான்’ பல இதயங்களை வென்றெடுத்து எங்கள் வாழ்வை மாற்றியது.


ஐந்து வருடங்களுக்கு பிறகு தற்போது எங்கள் தயாரிப்பு நிறுவனமான ரவுடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பான ’நெற்றிக்கண்’ தயாராக உள்ளது. என்றும் எங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் உங்களின் அதே அளவிலான அன்பையும் ஆதரவையும் இந்த திரைப்படத்திற்கும் தருவீர்கள் என நம்புகிறோம். ஆசீர்வாதம் அளித்த கடவுளுக்கும் பிரபஞ்சத்திற்கும் நன்றி. நெற்றிக்கண் பஸ்ட் லுக் போஸ்டர் இன்று முதல் வெளியாகும்' என கூறியிருந்தார்.
நானும் ரவுடிதான் திரைப்படம் மட்டுமல்ல, விக்னேஷ்-நயன் காதலும் ஐந்தாவது வருடத்தை கொண்டாடி வருகிறது என தெரிவித்து வருகின்றனர்  ரசிகர்கள்.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4576 Gold Rate
8 கிராம்
Rupee 36608 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700