Just In

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆலோசனை.

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆலோசனை. சென்னை தலைமைச் செயலகத்தில் நடைப்பெறும் ஆலோசனையில், உயர்கல்வித்துறை செயலாளர் அதிகாரிகள் பங்கேற்பு.

தேசிய கல்விக் கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்துவது தொடர்பாக, உயர்கல்வி செயலாளர் அபூர்வா உள்ளிட்ட அதிகாரிகளுடன் அமைச்சர் ஆலோசனை.

தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக் கேட்பு கூட்டத்தில் பெறப்பட்ட கருத்துகள் கடந்த அக்., 6-ம் தேதி மத்திய கல்வி அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது.

தேசிய கல்விக் கொள்கையை உடனடியாக அமல்படுத்துமாறு, அக்., 20-ம் தேதி நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு UGC உத்தரவிட்டிருந்தது. UGC உத்தரவையடுத்து, தேசிய கல்விக் கொள்கை விவகாரத்தில் அடுத்தது என்ன? என்பது குறித்து அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

ஆலோசனைக்குப் பின்னர் தமிழக அரசின் நிலைப்பாடு என்ன என்பது பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Today's Highlights

Petrol Diesel Rate பெட்ரோல் , டீசல் விலை - சென்னை
30-Nov-2020
பெட்ரோல்
Rupee 85.31(லி)
டீசல்
Rupee 77.84(லி)
பி.எஸ்.இ
.. ..
என்.எஸ்.இ
.. ..
1 கிராம்
Rupee 4576 Gold Rate
8 கிராம்
Rupee 36608 Gold Rate
1 கிராம்
Rupee 64.70
1 கிலோ
Rupee 64700